நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 26.04.2023

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 13 ஆம் நாளுக்கான [26 ஏப்ரல் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பெண்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து விற்பது, வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைக்கூடும். இதனால், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த முக்கிய முடிவு எடுப்பீர்கள். மந்தமாக இருந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிர்ப்புகள் குறையும் நாள். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்பாராத உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காரிய தடை விலகும். நேர்மறை எண்ணம் கொண்டு செயலாற்றுவது நல்லது. உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்த்துக்கூடிய நாளாகவும் இருக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கள் வரும். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். வேலைபளு அதிகமாக இருந்தாலும் உரிய நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற வாய்ப்புண்டு. மற்றவர்களை பற்றிய கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். திடீர் வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் மிகுந்த நாள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆசைப்பட்ட விஷயம் எதிர்பாராமல் கிடைக்கும். இதனால், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பு. மந்தமாக இருந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. கனிவான பேச்சுகள் தேவையற்ற பகைமையை குறைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். துணையின் விருப்பப்படி நடந்து கொள்வீர்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவினை எடுப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனைவிவழி பந்தங்களால் ஆதாயம் ஏற்படும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டு. நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சில செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்பாராத நன்மைகள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உறவினர்கள், நண்பர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவு இருமடங்காக இருக்கும். தொழிலில் லாபத்தை பெற உழைக்க வேண்டியிருக்கும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறும். பணியிடத்தில் உடன்பணிபுரிபவர் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தினரிடம் தேவையற்ற பேச்சுகளை குறைத்து கொள்வது நல்லது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிராத்தனை நிறைவேறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். வண்டியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. கண் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்களால் அனுகூலம் பலன் உண்டு. வேலை செய்யும் இடத்தில் சகஊழியர்களை அனுசரித்து கொள்வது நல்லது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Show comments

தொடர்பான செய்திகள்

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023.

சவால் நிறைந்த நாளாக இருக்கக்கூடும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.10.2023.

பண இழப்பு நேர வாய்ப்புள்ளதால் கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.10.2023.