Wed ,Feb 01, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57

ராசிபலன்

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 01 பிப்ரவரி 2023 புதன்

Nandhinipriya Ganeshan January 31, 2023

மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 18 ஆம் நாளுக்கான [01 பிப்ரவரி 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

கும்ப ராசியின் அன்புக்கு இந்த 4  ராசியில் பிறந்தவர்கள் அடிமை.....! 

Manoj Krishnamoorthi January 31, 2023

தன்னை நாடியவர்கள்  மீது அதிகமான பாசம் காட்டும் ராசியான கும்பத்தின் காதல் ஆழமானது ஆகும். பிடிவாத குணமும் சாதுரிய  பேச்சும் இவர்களின் பிறப்பு சொத்து ஆகும். எனவே கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசி பொருத்தமானது என்பதை காண்போம். 

கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்தாச்சு! | Midhunam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan January 27, 2023

புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மிதுன ராசியினரே! எதையும் அதிபுத்திசாலிதனத்தோடு செயல்பட்டு சாதித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு நிர்வாக திறமையும், சாதுர்யமாக செயல்படும் ஆற்றலும் இயற்கையாகவே இருக்கும். விருப்பு, சிந்தனை, பேச்சு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் வெற்றியடைய வழிகாட்டுவதில் வள்ளவராக திகழ்பவர். எந்த காரியத்திலும் நிறந்தரமான ஈடுபாடு என்பது உங்களுக்கு இருக்கவே இருக்காது. இதனால், உங்களை பற்றி மற்றவர்களால் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. சில நேரங்களில் சந்தேகப்படுவதும், சஞ்சலப்படுவதும் உங்களுடைய பலவீனம்.

குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு ஏற்படும் முக்கிய திருப்பங்கள்.. | Rishabam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan January 20, 2023

சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினரே! எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவீர்கள். எதற்காகவும் ஆத்திரம்படவும் மாட்டீர்கள். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது உங்களுக்கு மட்டுமே பொருந்தும். பொறுமையின் சிகரமென்றே உங்களை சொல்லலாம். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தே செயல்படுவீர்கள். எந்த கஷ்டம் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற மனஉறுதி படைத்தவர். கிட்டத்தட்ட அனைத்து விஷயத்திலும் சரிசமமாக பார்க்கும் மனநிலைப்படைத்தவர்.

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!

UDHAYA KUMAR January 19, 2023

கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பாக சொல்லப்போனால் 2019ம் ஆண்டு பாதியில் துவங்கி, நடந்து முடிந்த 2022ம் ஆண்டு இறுதி வரைக்கும் படாத பாடு பட்ட நீங்கள் வாழ்க்கையில் வெறுமையின் எல்லைக்கே சென்றிருப்பீர்கள். ஏன்டா வாழ்கிறோம் இந்த வாழ்க்கை ஏன் நம்மை போட்டு இந்த பாடு படுத்துகிறது என்கிற அளவுக்கு சோகங்களும், துன்பங்களும் உங்கள் மண்டையைப் பிடித்து ஆட்டியிருக்கும், உங்களை வதைத்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா எப்போதுதான் நம் வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் என நீங்கள் நாட்களை எண்ணி எண்ணி கடந்திருப்பீர்கள். வந்துவிட்டது 2023 இனி நம் வாழ்க்கை பிரகாசம்தான் என நினைத்தாலும் இந்த ஆண்டு துவக்கத்திலும் சில வேண்டாத, வருந்ததக்க விசயங்கள் நடந்திருக்கும். ஒன்று நீங்கள் அதற்கு பழக்கப்பட்டிருப்பீர்கள் இல்லையென்றால் அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்திருப்பீர்கள். வாழ்க்கை உங்களை பிரட்டி எடுத்தாலும் இனி சற்று நிம்மதி காற்றைச் சுவாசிக்கப்போகிறீர்கள். உங்களுக்கு கொடுத்து உதவப் போவது சனிதான். அவர் உங்களை மகிழ்ச்சியின் பக்கத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார். சோகங்களையும், தோல்விகளையும் நன்றாகவே கையாண்டு இப்போது வரை துவளாமல் இருக்கும் உங்களைப் போல மொத்தம் 5 ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறார் சனிபகவான். மேஷம் வேலை வாய்ப்பில் அதிகார யோகத்தை நிச்சயம் பெறுவார்கள். நல்ல நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். வெளிநாட்டு நிறுவனங்களில் உள்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்புகளும் அவ்வப்போது எதிர்பாராத உதவிகளும் பண வரவுகளும், இந்த வருடத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் கடுமையான உழைத்ததற்கான வெகுமதியும் பதவி உயர்வும் கிடைக்கும். இதுவரை கடனில் அவஸ்தைப் பட்டவர்களுக்கு படிப்படியாக சுமை குறைந்து வரும் டிசம்பருக்குள் இதிலிருந்து விடுபட வழி கிடைக்கும். கூடுதல் வருமானத்துக்கான வாய்ப்புகள் பிரகாசம் அதை நீங்கள் சாதுர்யமாக அமைத்துக் கொள்வதில் இருக்கிறது உங்கள் புத்திசாலித்தனம் இதுவரை திருமணம் ஆகாமல் 30 வயதைத் தொட்டவர்கள் மற்றும் கடந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வரும் வரன்களை மட்டும் பரிசீலிப்பதை விடுத்து நீங்களே கொஞ்சம் முயற்சி செய்து தேடினால் உங்கள் பூர்வீக ஊருக்கு அருகாமையிலேயே வரன் அமையும். தூரத்து சொந்தங்கள் மீண்டும் இதன்மூலம் இணைய வாய்ப்பு ஏற்படும். காதலிப்பவர்கள் வீட்டில் சொல்லிவிடுவது முதலில் சண்டைக்கு வழிவகுத்தாலும் பின் அவர்களே சமாதானம் ஆகி மணமுடித்து வைப்பார்கள். உங்களின் பேச்சில் உறுதித் தன்மையைப் பொறுத்து இதில் வெற்றி தோல்வி ஏற்படும் மிதுனம் தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறும் வருடமாக இந்த வருடம் அமையப்போகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு இதுவரை இருந்த துன்பங்கள் விலகி, சந்தோஷத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன. உங்களின் சாதுர்யமான பேச்சினால் நட்பு வட்டாரம் அதிகரித்து அதன்மூலம் கிடைக்கும் ஆதாயம் உங்களை பொருளாதார சூழலில் வேறொரு தடத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. இதுவரை இழுத்துக் கொண்டிருந்த வேலைகள், விவகாரங்கள், பிரச்சனைகள், பரிவர்த்தனைகள் அனைத்தும் முடிந்து நீங்கள் வெற்றி பெற நீங்களே காரணமாக அமைவீர்கள். கொஞ்சம் ஈகோவை விட்டு கொடுத்து நீங்கள் நேரடியாக இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினால் சில நொடிகளில் தீரும் விசயங்கள்தான் இவை. முதலீடுகளைக் கவனமாக கையாளுங்கள். உங்களுக்கு இதில் மிகச் சிறந்த லாபம் கிடைக்கப்போகிறது. பொதுவாகவே எடுத்த உடனே லாபம் வாய்ப்பில்லை என்றாலும் இப்போதிருந்தே நீங்கள் கவனமாக அடிஎடுத்து வையுங்கள். அடுத்த பத்து வருடங்களில் நீங்கள் வேறு எல்லையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள். ரியல் எஸ்டேட், நிலம், வீடு, மனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் மிகச் சிறப்பானதாகும். அரசியல், சமூக சேவை, ஐடிதுறை , மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என அனைத்து தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் வெற்றி நிச்சயம் துலாம் குறிப்பிட்ட தொழில் என்று இல்லை எந்த தொழிலை எடுத்தாலும் தொட்டதெல்லாம் பொன் என்பது போல உயர்வடைவீர்கள். ஆனால் பொறுமை மிக அவசியம். கவனக்குறைவு அலட்சியம் உங்களிடத்தில் இருந்தால் அதை எப்படி நீக்கி தொழிலில் முன்னேற்றம் அடைவது என்பதை நீங்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கப்பெறும். திருமண வயதைத் தொட்டவர்களுக்கு இப்போதே திருமண ஏற்பாடு செய்வது நல்லது. இருந்தாலும் மணம் செய்பவர்களின் கருத்துக்களைக் கேட்டு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். பெரியவர்களின் தலையாயக் கடமை என்பது தங்கள் பிள்ளைகளின் உண்மையான ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே. அதனை மீற வேண்டாம். முக்கியமாக துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் விரைவில் கைக்கூடும். நிதி பிரச்னைகள், உடல் நல பிரச்னைகள் தீரும். ஆனால் கவனமுடன் செயல்பட்டு அவ்வப்போது உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். தனுசு பதவி உயர்வு, நீங்கள் விரும்பிய பதவி, விருப்பமான இடமாற்றம், நல்ல நிறுவனங்களில் வேலை மற்றும் சலுகைகள் என தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். காதல் திருமணத்தில் மிகப் பெரிய குழப்பங்கள் இதுவரை நடந்து வந்திருக்கும். இனி அதைப் பற்றி கவலை கொள்ளாமல் கரியரில் கவனம் செலுத்துங்கள். திருமணம் ஆகவில்லை என்றாலோ காதலிக்கிறீர்கள் என்றாலோ கவலை இல்லை உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் சனிபகவான் தீர்க்கப்போகிறார். மகரம் ஆசைகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையும். சனி பகவானின் அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நினைத்தவற்றை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டது. ஏற்கனவே சில விசயங்களைத் தொடங்கி இருப்பீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும். லோன் மூலம் வாங்கி பணத்தை விரயம் செய்யவேண்டாம். ஆனால் தொழிலில் முதலீடாக வாகனத்தை வாங்குவது நல்ல ஏற்பாடாகவே இருக்கும்.

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan January 19, 2023

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! எந்த காரியத்தையும் முட்டிமோதியாவது சாதித்துவிடுவீர்கள். அனைத்து செயல்களிலும் முழு வேகத்துடன் ஈடுபடுவீர்கள். முன்கோபம் அதிகம் கொண்ட உங்களுக்கு போராட்ட குணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். உங்களை நம்பியவர்களுக்கு உதவி செய்வதில் வள்ளவர். மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. மேலும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்க ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் அமருகிறார். இந்த ஜென்ம குருவால் இதுவரை உங்களை மதிக்காமல் இருந்தவர்கள் அனைவருக்கும் உங்களின் மீது ஒரு மதிப்பு, மரியாதை ஏற்படும்.

தனுசு ராசிக்கு எந்த  ராசியில் காதலர் அமைந்தால் நல்லா இருக்கும்...? | Dhanusu Love Horoscope

Manoj Krishnamoorthi January 14, 2023

விடாமுயற்சி குணம் கொண்ட தனுசு ராசியினர் காதல் உறவில் எப்போதுமே உறுதியாக இருப்பர். இவர்களுக்கு சரியான ஜோடி அமைவதில் தான் தாமதம் ஏற்படுமே தவிர வாழ்வை சூதானமாக நகர்த்தும் பக்குவம் இருக்கும். இதோ பதிவில் தனுசு ராசிக்கு பொருந்தும் ராசிகள் யாதென்ன என்பதை கீழே காண்போம்.

இந்த வருட மகர சங்கராந்தி பிரவேசத்தால் யாருக்கு ராஜயோகம், யாருக்கு ஆபத்து..? | Makar Sankranti Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan January 13, 2023

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 30 ஆம் தேதி (ஜனவரி 14) சனிக்கிழமை கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம், சுகர்ம நாமயோகம் பாலவ கரணத்தில் இரவு 8.45 மணிக்கு சூரிய உதயாதி 35.17 நாழிகை அளவில் சிம்ம லக்னம் மிது நவாம்சையில் சங்கராந்தி பகவான் மகர ராசியில் பிரவேசிக்க உள்ளார். இதனால், அடுத்த வருடம் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ யோகம் என்பது பற்றி பார்ப்போம். வருடந்தோறும் தை மாதம் முதல் ஆணி மாதம் வரை உத்தராயணம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயணம் என்றும் கூறப்படும். அதாவது, ஆடி மாதத்தில் இருந்து தெற்கு திசையில் பயணித்துவந்த சூரிய பகவான், தை மாதத்தில் இருந்து வடக்கு திசையில் பயணிக்க தொடங்குவார். இதை தான் நாம் "தைப் பொங்கல்" என்று கொண்டாடுகிறோம். இதுவே ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இதை "மகர சங்கராந்தி" என்று கொண்டாடுவார்கள்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in Tamil

Nandhinipriya Ganeshan January 16, 2023

சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசியாகும். தற்போது மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நீதிகாரகனான சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, வருகின்ற 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். இருப்பினும், சனிப்பெயர்ச்சியானது சில ராசிக்கு ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி போன்றவற்றை ஏற்படுத்தும் அதேப்போல் சில ராசிக்கு ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி விலகும். அந்தவகையில், இந்த பெயர்ச்சியின் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக 9ஆம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். அதேபோல், கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக பயணம் செய்கிறார். இத்தகைய மாற்றத்தினால் கடக, மிதுன ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

Indraya Rasi Palan | Today Rasi Palan | இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2023 - வியாழக்கிழமை

Nandhinipriya Ganeshan January 12, 2023

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 28 ஆம் நாள் வியாழக்கிழமை [12 ஜனவரி 2023] நாளுக்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். ராசிபலன்: மேஷம் - எதிர்ப்பு ரிஷபம் - போட்டி மிதுனம் - விவேகம் கடகம் - அச்சம் சிம்மம் - பீடை கன்னி - தனம் துலாம் - வீம்பு விருச்சிகம் - பொறுமை தனுசு - இன்பம் மகரம் - ஆசை கும்பம் - அமைதி மீனம் - நலம் நல்ல நேரம்: காலை: 12.30 - 01.30 வரை மாலை: 06.30 - 07.30 வரை