மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 22 ஆம் நாளுக்கான [09 அக்டோபர் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 06.15 - 07.15 மணி வரை
மாலை: 04.45 - 05.45 மணி வரை
உங்கள் புத்திசாலித் தனத்தால் முன்னேற்றம் அடைவீர்கள். கலை மற்றும் இசை சார்ந்த துறையில் ஈடுபட்டு அதிகரிக்கும். வளர்ச்சிக்கான சிறந்த நாளாக இருக்கும். பணியில் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வளர்ச்சியடைவீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாக பணப்புழக்கம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் மேம்படும். மனநிம்மதியுடன் இருப்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணவரவு தாராளமாக இருப்பதால் சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான பாராட்டு கிடைக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். முயற்சிக்கான பலன் தரும் நாளாக இருக்கும்.
தேவையற்ற சிந்தனைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். நினைத்த காரியங்கள் முடிய தாமதமாகலாம். எந்த செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இதனால் தவறுகள் நடப்பதை தவிர்க்கலாம். தம்பதிகள் வெளிப்படையாக பேசி சமரசம் செய்து கொள்ளவும். ஒரு அளவுக்கு பணவரவு இருக்கும். இருந்தாலும் அது திருப்தியாக இருக்காது. தொண்டை சம்மந்தமான உடல் உபாதை ஏற்படலாம்.
தலைவலியால் அவதிக்குள்ளாகலாம், கவனமாக இருக்கவும். தேவையற்ற செலவுகள் சேமிப்பை குறைக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒரு விதமான எரிச்சலான சூழல் அமையும். எனவே, பொறுமையாக இருப்பது நல்லது. பணியை சரியான நேரத்தில் செய்து முடிக்க இயலாது. சக ஊழியர்களிடத்தில் நல்லுறவு இருக்காது. நிதானமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவும்.
உத்தியோகத்தில் கவனத்துடன் செயல் படுவதன் மூலம் தவறு நடப்பதை தவிர்க்கலாம். தம்பதிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாததால் சற்று விலகி இருப்பார்கள். இதனால் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தோள் மற்றும் கை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அணுகுமுறையில் கவனம் வேண்டும். இன்று சாதகமான பலன் கிடைக்கும் நாளாக இருக்கும்.
தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.
உத்தியகோகத்தில் சிறந்த பலன் கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். சரியாக திட்டமிடுவதன் மூலம் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். அதனால் சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தேவையற்ற செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு வலி வந்து நீங்கும். சவால் மிகுந்த நாளாக இன்று இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும். பொறுமையுடன் செயல்படவும். திட்டமிட்டு பணியாற்றினால் சிறந்தது. வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள்.
கணவன் - மனைவி பொறுமையாக இருக்கவும். பணவரவு எப்பையும் போல் காணப்படும். சில நெருக்கடியான சந்தர்ப்பங்களை சந்திக்க நேரிடும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை வரலாம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியை செய்தால் சரியாக இருக்கும். ஆர்வமின்மையுடன் காணப்படுவீர்கள்.
சேமிப்பு அதிகமாகவும் அளவிற்கு பணவரவு அதிகமாகும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். முயற்சிக்கான பலன் வந்து சேரும். கடினமான பணியை எளிதில் முடிப்பீர்கள். அதிக காதலனுடன் தம்பதிகள் இருப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அமைதியான நாளாக இருக்கும்.
இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். பணத்தேவை பூர்த்தியடையும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடப்பதால் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மன சோர்வுடன் காணப்படுவீர்கள். தொடை வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது. முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். உணர்ச்சியை வெளிப்படுத்துவன் மூலம் தம்பதிகள் நெருக்கமாக உணர்வார்கள். பணியில் தவறு நடக்காமல் இருக்க கவனமாக செயல்படுங்கள். முயற்சிக்கான பலன் கிடைக்க சற்று தாமதமாகலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…