மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் நாளுக்கான [11 அக்டோபர் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 09.15 - 10.15 மணி வரை
மாலை: 04.45 - 05.45 மணி வரை
மேஷம் | Nalaya Rasi Palan Mesham
எந்த சூழலிலும் நிதானமாக இருக்க வேண்டும். இன்று சவாலான நாளாக இருக்கலாம். குறித்த நேரத்தில் பணியை முடிக்க தாமதமாகலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும். மனதில் இருக்கும் குழப்பத்தை வாழ்க்கைத் துணையிடம் கூறி ஆறுதல் அடைவீர்கள். கால் வலி உண்டாக வாய்ப்புள்ளது.
ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam
மன உளைச்சல் உண்டாகலாம். தொண்டை மற்றும் கால் விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையால வேண்டும். உத்தியோக பணியில் தாமதம் ஆகலாம். தம்பதிகளுக்கு இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற பண விரயங்கள் உண்டாகலாம்.
மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam
பணவரவு தாராளமாக இருக்கும். சிறந்த ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நல்லுறவு மேம்படும். உயர் அதிகாரிகள் உங்களின் திறமைக்கு பாராட்டுவார்கள். பணியில் செயல்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மன அமைதியுடன் எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும். இன்று நீங்கள் விரும்பியது நிறைவேறும் நாளாக இருக்கும்.
கடகம் | Nalaya Rasi Palan Kadagam
சற்று பதட்டமான காணப்படுவீர்கள். நிதானமாக எந்த விஷயத்தையும் எடுத்துக்கொள்ளவும். புதிய முயற்சி எடுப்பதை தவிர்க்கவும். சவாலாக பணியை செய்ய நேரிடும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் பொறுமையாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடன் ஆவேசமாக பேச வேண்டாம். இல்லையெனில் விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தலைவலி உண்டாகலாம் கவனம்.
சிம்மம் | Nalaya Rasi Palan Simmam
இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். கால் வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். பணம் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். ஆன்மிகம் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
கன்னி | Nalaya Rasi Palan Kanni
தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்காத சூழல் உண்டாகலாம். கால் அல்லது தொண்டை வலி உண்டாகலாம். உத்தியோகத்தில் பணி அதிகமாக காணப்படும். கடினமான வேலையை எளிதில் செய்து முடிப்பீர்கள். வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். நிதானத்தில் கடுமையான சூழ்நிலையை சமாளிப்பீர்கள்.
துலாம் | Nalaya Rasi Palan Thulam
ஆரோக்கியம் சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் சேமிப்பு மேம்படும். கணவன் - மனைவி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். உத்தியோக பணியை மகிழ்ச்சியாக மேற்கொள்வீர்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும். உற்சாகத்துடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பீர்கள். இன்று முன்னேற்றத்திற்கான நாளாக அமையும்.
விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam
நிதிநிலை திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முழு கவனத்துடன் வேலையை செய்வீர்கள். சிறு தூரப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். அசால்டாக எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள்.
தனுசு | Nalaya Rasi Palan Dhanusu
சற்று மந்தத்தன்மையுடன் காணப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொண்டால் நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமையை மேம்படுத்த வாய்ப்புகள் கைகூடி வரும். பணவரவு சற்று மந்தமாக இருக்கும். தந்தையின் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
மகரம் | Nalaya Rasi Palan Magaram
பல தடைகளுடன் உங்களின் லட்சிய பாதை தொடரும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் விவாதம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பொறுமையக இருக்கவும். பண இழப்பு நேரிட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சில இன்னல் வந்து நீங்கும்.
கும்பம் | Nalaya Rasi Palan Kumbam
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். நினைத்த விஷயத்தை நிறைவேற்றும் வாய்ப்பு அமையும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிம்மதியான பணி சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகள் நற்பலனைத் தரலாம். பணவரவு சிறப்பாக இருப்பதால் சேமிப்பு உயரும்.
மீனம் | Nalaya Rasi Palan Meenam
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தின் சூழல் சிறப்பாக இருக்கும். எந்த செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ளவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…