சரசரவென குறைந்த தங்கம் விலை; சவரன் எவ்வளவு தெரியுமா? 

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை வாரத்தின் கடைசி நாளான இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

சென்னையில் நேற்று மாலை இறுதி நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,020 ரூபாய்க்கும், சவரன் 40,160 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இன்று காலை (டிச.03)  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 5,016 ரூபாயாகவும், சவரனுக்கு 32  ரூபாய் குறைந்து 40,128 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.  அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு  4 ரூபாய் குறைந்து 5,418 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 43,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 60 காசுகள் வரை உயர்ந்து 71 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 600 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 71,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Show comments

தொடர்பான செய்திகள்

தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை...இன்று ரூ.120/- அதிகரிப்பு | Today Gold Price in Tamilnadu.

எதிர்பார்க்காத அளவிற்கு குறைந்த தங்கம் விலை | Today Gold Rate in Tamilnadu.

புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை...சவரன் ரூ.45,000/- தாண்டி போகுது...மக்களே உஷார் | Gold Rate Today.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை...நேற்றைய விட இவ்ளோ கம்மியா? | Today Gold Rate.