உலக சாதனை படைத்த திப்பு சுல்தான் வாள்.. ஏலத் தொகைய கேட்டா ஆடிப்போய்டுவிங்க.. | Tipu Sultan Sword Auction

1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் மைசூர் மன்னராக ஆட்சி புரிந்துவர் திப்பு சுல்தான். 'மைசூர் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் இப்போதிருக்கும் ஏவுகணை தாக்குதலை 18 ஆம் நூற்றாண்டிலேயே போர்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர். ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மிக கடுமையாக போராடியதோடு, மராட்டியர்களோடும் பல போர்கள் புரிந்துள்ளார். இந்த அனைத்து போர்களிலும் இவருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்த அவருடைய வாள். ஜெர்மன் பிளேடு வகையை அந்த வாளை தனது படுக்கை அறையில் பாதுகாப்புக்காக எப்போதும் வைத்திருப்பாராம். திப்பு சுல்தானுடனான அதன் நெருங்கிய தொடர்புதான் இந்த வாளை தனித்துவம் ஆக்குகிறது. 

பின்னர், ஒரு போரில் மன்னர் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயே இராணுவம் அவரது படுக்கையறையில் இருந்து இந்த வாளை கைப்பற்றியது. செரிங்கபடம் அரண்மனையில் இருந்து 4 மே 1799ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வாள், திப்பு சுல்தானுக்கு எதிராக போராடிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டேவிட் பேர்ட் என்பவருக்கு அவரது வீரத்தை பாராட்டி பரிசாக வழங்கப்பட்டது.

அந்த வாள் இப்போது லண்டனில் இருக்கிறது. அந்த வாளை லண்டனைச் சேர்ந்த போன்ஹாம்ஸ் (Bonhams) என்ற ஏல நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமையன்று ஏலம் விட்டது. லண்டனில் நடந்த இந்த ஏலத்தில் தொலைபேசி வாயிலாக கலந்து கொண்ட நபர் அந்த வாளை 14 மில்லியன் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் 143 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்தவர் யார் என்ற விபரத்தை வெளியிட மறுத்த ஏல நிறுவனம் தாங்கள் நிர்ணயித்ததை விட ஏழு மடங்கு அதிக தொகை்கு இந்த வாள் ஏலம் போய் உள்ளதாக கூறியுள்ளது.

இந்திய மற்றும் இஸ்லாமிய பொருட்களின் ஏலத்தில் இது உலக சாதனை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாள் திப்பு சுல்தானின் வாள் என்பதைத் தாண்டி இது இந்திய பழங்குடி கலை வெளிப்பாட்டின் எடுத்துக்காட்டாகும். இதன் தங்க கைப்பிடியும் அலங்கார வேலைப்பாடுகளும் இதன் மதிப்பைக் கூட்டுகின்றன. 

Show comments

தொடர்பான செய்திகள்

இனிமே கிரிப்டோகரன்சிக்கு டாடா...RBI கொண்டு வரும் eRupee CBDC கரன்சி.

தமிழகத்தில் பத்திர பதிவுக்கான சேவை கட்டணங்களை உயர்த்த முடிவு! | Bond Registration Service Charge Hike.

வெறும் 2 நாள் தான் - ஆனா ஆஃபர்கள் ஏராளம் | Amazon Prime Day Sale.

டெக் மஹிந்திரா CEOக்கு நேர்ந்த கதி - பாதியாக குறைந்த சம்பளம்! - Tech Mahindra.