Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,898.31
-107.63sensex(-0.15%)
நிஃப்டி22,481.10
-20.90sensex(-0.09%)
USD
81.57
Exclusive

இனிமே கிரிப்டோகரன்சிக்கு டாடா...RBI கொண்டு வரும் eRupee CBDC கரன்சி

Priyanka Hochumin Updated:
இனிமே கிரிப்டோகரன்சிக்கு டாடா...RBI கொண்டு வரும் eRupee CBDC கரன்சிRepresentative Image.

தற்போது டிஜிட்டல் கரன்சி பயன்படுத்துவதில் இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் eRupee மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை (CBDC) பயன்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. மேலும் கூடிய விரைவில், இந்தியாவில் யுபிஐ க்யூஆர் குறியீடுகள் மூலம் சிபிடிசி பேமெண்ட்டுகளை எளிதாக்கும் செயல்பாடுகளை கொண்டு வர இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயாராக உள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற G20 நிகழ்வின் போது, RBI இன் பிரதிநிதிகள் UPI QR குறியீடுகள் மூலம் CBDC கட்டணங்களை எளிதாக்கும் திட்டத்தை ஜூலை மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் தற்போது இந்தியா முழுவதும் இன்ஸ்டன்ட் பேமெண்ட் ஆப்ஷனாக UPI ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த CBDC பேமெண்ட்டுகளை சில்லறை விற்பனையாளர்கள் ஏற்றுக்கொண்டால் வாடிக்கையாளர்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.

தற்போது நடைபெற்று வரும் CBDC சோதனைகளில் - ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட பல பெரிய அரசு மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் பங்கேற்றுள்ளனர். அத்துடன் முகேஷ் அம்பானியின் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மும்பையில் CBDC கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது உங்களுக்கு கிரிப்டோகரன்சி போல் தோணலாம். ஆனால் இது மத்திய வங்கிகளால் முறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனின் புழக்கத்தால் இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நாணயத்தின் பயன்பாடு புது வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்