Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

வணிக செய்திகள்

சூப்பரு.. ஏப்ரலில் 15 நாளில் விடுமுறை.. கரெக்டா பிளேன் போட்டுக்கோங்க..

Gowthami Subramani March 18, 2023

ஒவ்வொரு மாத இறுதியிலும், அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாள்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும். அதன் படி, வரும் ஏப்ரல் மாதத்தில் 15 நாள்கள் விடுமுறை விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாளில் விடுமுறை விடப்படும் குறித்த தகவல்களைப் பற்றி இதில் காணலாம். ஏப்ரல் மாதம் வருவதற்கு இன்னும், 10 நாள்களுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போதே விடுமுறைக்கான பட்டியல் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரூ.44,000-ஐக் கடந்த தங்கத்தின் விலை..! இனிமே வாங்க முடியாது போல... துயரத்தில் இல்லத்தரசிகள்..

Gowthami Subramani March 18, 2023

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் ரூ.880 உயர்ந்து ரூ.44,000-க்கு மேல் சென்றது. 22 காரட் தங்கத்தின் விலை நிலவரப் படி, கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ரூ.5560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்து ரூ.44,480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் இவ்வளவு அதிகமா.? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

Gowthami Subramani March 15, 2023

உலக அளவில் முதலீட்டாளர்கள், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால், விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் தங்கத்தின் விலையானது ரூ.520 உயர்ந்துள்ளது. இதனால், சவரனுக்கு ஆபரணத் தங்கம் 43,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கமானது ரூ.5,390-க்கு விற்பனையானது.

தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?

Gowthami Subramani March 08, 2023

தங்கத்திற்கு ஹால் முத்திரை மிக அவசியம் என கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களிடையே ஹால்மார்க் குறித்த கேள்விகள் நிறைய எழுந்துள்ளது. குறிப்பாக, HUID எனப்படும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏன்? அது நம் நகைகளில் இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

இந்த மாசம் 12 நாள் விடுமுறை.. முன்னாடியே பிளேன் பண்ணிக்கோங்க மக்களே.!

Gowthami Subramani February 27, 2023

வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறை நாள்களானது மாநில வாரியாக வேறுபடுகிறது. அதன் படி, இந்த மார்ச் 2023-ல் எந்தெந்த நாள்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதைப் பற்றி இதில் பார்க்கலாம். ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் படி, இந்த மார்ச் 2023 மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை நாள்கள் விவரங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் நெட்வொர்க்கிங் போன்றவை செயல்பாடுகளிலேயே இருக்கும்.

ரேஷன் கடையில் இனிமே இந்த அரிசி தான் | Enriched Rice in Tamilnadu Ration Shops

Priyanka Hochumin February 22, 2023

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 ஆகியவற்றைக் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசி முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும் , சத்துணவு திட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது.

தொடர்ந்து சரியும் தங்கம்..! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்...

Gowthami Subramani February 21, 2023

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய நாளின் படி, 22 காரட் தங்கத்தின் விலை அதாவது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்துள்ளது. மேலும், ஒரு சவரனுக்கு ரூ.5,280-லிருந்து, ரூ.5,275 ரூபாயாக உள்ளது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.42,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இவ்வளோ கம்மியா?

Nandhinipriya Ganeshan February 20, 2023

வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை 1 மடங்கு ஏறினால், இரு மடங்கு குறைந்தே இருக்கிறது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது. சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ. 5290 ஆகவும், சவரன் ரூ.42,320 ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ. 5280 ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.42240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.80 ஆக இருந்தநிலையில், கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.71.70 ஆகவும், கிலோ ரூ.71.800 ஆக இருந்த நிலையில், ரூ. 100 குறைந்து ரூ.71,700 ஆக குறைந்துள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இந்த தவறு செஞ்சிருந்தா மாட்டீப்பீங்க..

Gowthami Subramani February 19, 2023

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்த தவறு செய்திருப்பின் அவர்களுக்கு கடுமையான விதிமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள், அரசிடமிருந்து இலவச ரேஷன் பெற்று வருகின்றனர். இருப்பினும், ரேஷன் கார்டுதாரர்களின் சிறிய தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒரு ரேஷன் கார்டு தாரர்கள் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து ரேஷன் எடுக்கவில்லை எனில் அவரது பெயரானது பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும், இதற்குப் பதிலாக மற்றொரு ஏழை குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ஆத்தீ இவ்ளோ குறைஞ்சிடுச்சா.. தங்கம் விலை குறைவால் நகைப்பிரியர்கள் குஷி!!

Sekar February 17, 2023

ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.42,240க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்து, ரூ.42,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.