Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் பத்திர பதிவுக்கான சேவை கட்டணங்களை உயர்த்த முடிவு! | Bond Registration Service Charge Hike

Baskaran. S Updated:
தமிழகத்தில் பத்திர பதிவுக்கான சேவை கட்டணங்களை உயர்த்த முடிவு! | Bond Registration Service Charge HikeRepresentative Image.

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கான சேவை கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், ஜூலை 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வணிக வரி மற்றும் சேவை வரி செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.  

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:  பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைக்கான கட்டணங்கள் கடந்த 20வருடங்களுக்கும் மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப் பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து நகல் வழங்குதல் போன்ற சேவைக்கான பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில் பதிவுச்சட்டம் 1908, பிரிவு 78-ன் கீழ் கட்டண விவர அட்டவணையில் உள்ள 20 இணங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவண பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், அதிகப்பட்ச முத்திரை ஆவண தீர்வை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது.  

இதேபோல் தனிமனித கட்டணம் ரூ.200லிருந்து ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10ஆயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு 1சதவீதம் என மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த கட்டண உயர்வு வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்