Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

டெக் மஹிந்திரா CEOக்கு நேர்ந்த கதி - பாதியாக குறைந்த சம்பளம்! - Tech Mahindra

Abhinesh A.R Updated:
டெக் மஹிந்திரா CEOக்கு நேர்ந்த கதி - பாதியாக குறைந்த சம்பளம்! - Tech MahindraRepresentative Image.

இந்தியாவில் டெக் மஹிந்திரா ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உள்ளது. இதன் தலைமை செயல் அலுவலர் சி.பி. குர்னானியின் சம்பளம் 32 கோடியாக குறைந்துள்ளது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது 2021  நிதியண்டை விடவும் 51 விழுக்காடு குறைவு என்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.

கடந்த நிதியாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில், சிபி குர்னானியின் சம்பளம் 32 கோடியாக குறைந்துள்ளது. இவர் 2021 நிதியாண்டில் 63.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இந்த நிலைக்கு குர்னானியின் சம்பளம் சென்றதற்கு, அவர் குறைந்த எண்ணிக்கையிலான பங்கு விருப்பங்களை தேர்ந்தெடுத்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

குர்னானியின் ஊதியம் பாதியாக குறைந்தாலும், அது டெக் மஹிந்திரா ஊழியர்களின் சராசரி வருமானத்தை விட  467 விழுக்காடு அதிகமாகும். குர்னானி, பணியாளர் பங்கு விருப்பத் திட்டங்களில் கடந்த நிதியாண்டில் (ESOP) ரூ. 25.6 கோடி ஈட்டினார். இது கடந்த ஆண்டுக்கு முந்தைய நிதியாண்டில் ரூ. 58.8 கோடியாக இருந்தது. தரகுத் தொகையாக மட்டும் ரூ.1.8 கோடி வருவாய் ஈட்டி உள்ளார்.

குர்னானிக்கு இப்போது 65 வயது ஆகிறது. டிசம்பர் மாததோடு  இவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் மோஹித் ஜோஷி ஏற்கனவே கூடுதல் இயக்குநராக இணைந்துள்ளார். ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் வருடாந்திரக் கூட்டத்தில் அவரின் நியமனம் பங்குதாரர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, டிசம்பர் 20ஆம் தேதி புதிய தலைமை செயல் அலுவலராக அவர் பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்