சென்னை புத்தக கண்காட்சி நிறைவு; மொத்தம் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா? 

46வது புத்தக கண்காட்சியில் 16 கோடிக்கு மேல் விற்பனையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 


46வது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 17 நாட்களாக நடைப்பெற்றது. இறுதி நாளான நேற்று நிறைவு விழாவிற்கு பின்பு  பபாசி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர் . அப்போது பேசிய  தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தலைவர் வைரவன், இந்த புத்தக  கண்காட்சிக்கு தினம்தோறும்   சராசரியாக 1 லட்சம் வாசகர்கள்  வந்துள்ளனர் என்றும்  இந்த புத்தக கண்காட்சிக்கு  மொத்தம் 16 நாட்களில்  இதுவரை 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். 

ஆனால் கடந்த ஆண்டு புத்தக காட்சிக்கு   10 லட்சம் பேர் வந்தனர். ஆனால் இந்த வருடம் 5 லட்சம்  வாசகர்கள் அதிகரித்துள்ளனர். இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில்  16 கோடி ரூபாய்க்கும் மேல் புத்தகங்கள் விற்பனை ஆனதாக தெரிவித்தார். மேலும் சர்வதேச புத்த கண்காட்சியின் மூலம் 160 புத்தகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

இந்த வருட புத்தக கண்காட்சியில்  100க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் இந்த புத்தக கண் காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டை விட அடுத்தாண்டு உணவு பொருட்களின் விலையை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத்துறைக்காக ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டது. அந்த அரங்கத்திற்கு பலதரப்பட்ட மக்கள் புத்தங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Show comments

தொடர்பான செய்திகள்

டான் பாஸ்கோ பள்ளியில் உரிய கட்டணமே வசூலிப்பு..! - நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு .

9 ஆண்டுகளின் அரசு செய்த சாதனை - மாணவர்கள் மத்தியில் நிதியமைச்சர் பேச்சு!.

அரசு இடத்தை விற்ற தனியார் கல்லூரி - நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு.