Nandhinipriya Ganeshan February 22, 2023
சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாடி கட்டிடம் குழுங்கியதால் ஊழியர்கள், பொது மக்கள் வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். மெட்ரோ ரயில் பணியினால் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Nandhinipriya Ganeshan February 13, 2023
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சரவணன், இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அதேபகுதியை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், இவர்களது வீட்டில் இருந்த 130 சவரன் தங்க நகைகளை நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரி எம்ஜிஆர் நகர் போலீசாரும், அசோக் நகர் காவல் உதவி ஆணையரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்துகொண்டிருந்தபோது, திருடு போனதாக கூறப்பட்ட 130 சவரன் தங்க நகைகளும் பீரோவில் இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஐடி தம்பதி மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது சரியாக 12.30 மணியளவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாகவும், காலையில் எழுந்து பார்த்தப்போது பீரோ திறந்திருந்ததாகவும், சோதனை செய்து பார்க்கையில் நகைகள் இல்லாததால் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்ததாகவும் சரவணன் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் எலி தொல்லை காரணமாக பாத்திரங்கள் உருண்டு விழுந்ததும், அதை கொள்ளையர்கள் என அந்த தம்பதியினர் தவறாக நினைத்ததும் தெரியவந்தது. வீட்டில் பொருட்கள் காணவில்லை என்றால் பதற்றமடையாமல், நிதானத்துடன் தேடுமாறு அவர்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தை பார்க்கும்போது வடிவேலு ஒருபடத்தில் ஆடு திருடு போகல; யாரோ ஆட்டை திருடுன மாதிரி கனவு கண்டதாக சொல்லும் அந்த சீன் தான் நினைவுக்கு வருகிறது.
சென்னையில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்ஸ்டாகிராமில் தோழியாக பழகிய எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எலெக்ட்ரிக் ரயில் மீது பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்ய முயற்சித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
46வது புத்தக கண்காட்சியில் 16 கோடிக்கு மேல் விற்பனையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காணும் பொங்கல் தினத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 36.338 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஈரோடு மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திமுக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.