Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

9 ஆண்டுகளின் அரசு செய்த சாதனை - மாணவர்கள் மத்தியில் நிதியமைச்சர் பேச்சு!

Abhinesh A.R Updated:
9 ஆண்டுகளின் அரசு செய்த சாதனை - மாணவர்கள் மத்தியில் நிதியமைச்சர் பேச்சு!Representative Image.

சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (VISTAS) இன் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா  பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பட்டமளித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்;

“புதிய இந்தியா என்று புதுவிதமான நாடை உருவாக்கும்பொழுது நாம் சொல்கிறோம் தொழில்நுட்பத்தையும் அறிவு நுட்பத்தையும் பயன்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி பெற வைக்கும் திறமையுள்ள நாடு இந்தியா அந்த தகுதி உள்ள இளைஞர்கள் இருக்கக்கூடிய நாடு நமது பாரத நாடு.

மாணவர்களுக்கு தகுதியும் திறமையும் கொடுக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் இன்றைக்கு அதிக தேவையாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கல்வியில் பல வளர்ச்சிகளை நாம் பெற்றுள்ளோம் நமது நாட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

கிராமப்புற பள்ளிகளில் பரிசோதனை கூடங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஐஐடி உருவாக்கப்படுகிறது. 1133 பல்கலைக்கழகங்கள் நமது நாட்டில் உள்ளது 2014க்கு பிறகு 53 சதவீதம் பல்கலைக்கழகங்கள் உயர்ந்துள்ளது. 2014 க்கு முன்பு 720 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தது.

கடந்த 9 ஆண்டுகளில் 97 விழுக்காடு மருத்துவ இடங்கள் உயர்ந்துள்ளன. 51,348  மருத்துவ இடங்கள் 2014 வரை இருந்தது. 99,763 மருத்துவ இடங்கள் இன்று உயர்ந்துள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் இடங்கள் மருத்துவ படிப்பில் தயாராக உள்ளது. 81 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 வரை 387 கல்லூரிகள் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 700 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு திறமை இருக்கிறதா என கேட்கிறார்கள். ஒன்றிய அரசு சார்பில் 2 கோடியே 83 லட்சம் மாணவர்களுக்கு திறமை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

அக்டோபர் 2022ல் இருந்து இன்று வரை 4 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 குள் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட உள்ளது.

இது தவிர வெளிநாடுகளில் மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரான்ஸ் ஆஸ்திரேலியா

யு.ஏ.இ  உட்பட பல நாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியாவில் கல்வி கற்கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற இங்கு நீங்கள் பெரும் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

பள்ளி காலத்திலேயே அறிவியல் பரிசோதனைகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக 10000 அடல்ட் டிங்கரிங் மிஷன் என்ற பரிசோதனை கூடத்தை 700 மாவட்டத்தில் அமைத்துள்ளோம். 10 வருடங்களுக்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் 4000 பெயர்களுக்கு மட்டும்தான் patent  எனப்படும் உரிமம் வழங்கப்படும். இன்று ஆண்டிற்கு 30,000 பேடென்ட் உரிமங்களை வழங்கி வருகிறோம்,” என்று பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்