Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

அரசு இடத்தை விற்ற தனியார் கல்லூரி - நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு

Abhinesh A.R Updated:
அரசு இடத்தை விற்ற தனியார் கல்லூரி - நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்புRepresentative Image.

சென்னை மாங்காட்டில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லூரியில், கடந்த 2019-20ஆம் ஆண்டில், மருத்துவ தேர்வுக் குழு பரிந்துரைக்காமல் மாணவர் சேர்க்கை கடைசி நாளான 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ல் ஒன்பது மாணவர்களுக்கு  சேர்க்கை வழங்கப்பட்டது. இதில், ஐந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அடங்கும்.

இந்த ஒன்பது மாணவர்களையும் நீக்கம் செய்யும்படி, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகம், தனியார் கல்லூரிக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், படிப்பை தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் பூஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவர் சேர்க்கைக்காக எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்கிற விவரங்களை மனுவாக தாக்கல் செய்ய மாணவர்களின் பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெற்றோர் தாக்கல் செய்த மனுக்களில், மாணவர் சேர்க்கைக்கு, 45 லட்சம் முதல் 65 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி தரப்பில், கடைசி நாளில் 9 இடங்களும் காலியாக இருந்ததால், நீட் தேர்வில் 112 முதல் 290 மதிப்பெண்கள் வரை பெற்ற 9 பேர் சேர்க்கப்பட்டதாகவும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 109 மற்றும் 123 மதிப்பெண்களை வாங்கியவர்களையும், தனியார் கல்லூரிகளில் 107 முதல் 112 மதிப்பெண் வாங்கியவர்களை சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 2019-20இல் சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே 4 ஆண்டுகளை முடித்துவிட்ட நிலையில், அவர்களை நீக்குவதால் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். கடைசி நாளில் சேர்க்கப்பட்ட 9 பேரில் 5 பேர் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனுமதி இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதால், 2023-24ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் இருந்து 5 இடங்களை அரசுக்கு  ஒதுக்க வேண்டுமென தனியார் கல்லூரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட 5 மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 2 கோடியே 76 லட்ச ரூபாயை 2019ஆம் ஆண்டிலிருந்து 6 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக் குழு செயலாளர் பெயரில் தனி கணக்கு தொடங்கி, அதில் வைப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டுமெனவும் கல்லூரிக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு உதவிதொகையாக வழங்க இத்தொகையை பயன்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்கொடை தொடர்பாக பெற்றோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு வசூலிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தால், சிபிசிஐடி விசாரணயை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். விதிகளை மீறி மாணவர்களை சேர்த்தது குறித்து, தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்