Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,070.40
64.46sensex(0.09%)
நிஃப்டி22,552.20
50.20sensex(0.22%)
USD
81.57
Exclusive

சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு

Baskaran Updated:
சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு  Representative Image.

சென்னை: மாநகர் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி மேற்கொண்டு வரும் நிலையில், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருகிறது. 

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்ற பிறகு குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் மாநகர் முழுவதும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போலீஸ் சோதனை தீவிரமாக நடைபெற உள்ளது. 

போக்குவரத்து வீதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை முழுவதும் 102போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடைபெற உள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலைய இதன்படி 306 இடங்களில் சோதனை நடைபெற உள்ளது. இந்த அதிரடி வேட்டையின் போது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

குறிப்பாக போலீசார் வார இறுதி நாட்களில் சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நாளையும், நாளை மறுநாள் நடைபெறும் வாகன சோதனையில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி குடித்து விட்டு வாகனங்களை இயக்குபவர்களை பிடித்து ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுமுறை நாட்களில் மதுக்குடித்து விட்டு வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்