நா ரெடிதா வரவா அண்ணன் நா இறங்கி வரவா - வெளியானது லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

சென்னை: லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடிதா வரவா பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு கொடுத்த சூட்டை இதில் தணித்துக்கொள்ள அவர் முனைந்திருப்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்குவதாலும் லியோ நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கிவருகிறார். படத்தில் விஜய்க்கு இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது.

லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்தப் படத்தின் கதை என்ன, அது எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா போன்ற எக்கச்சக்க கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் அதுகுறித்து எந்தவிதமான தகவலையும் கசியவிடாமல் படக்குழு பாதுகாத்துவருகிறது. இந்தச் சூழலில் முதல் சிங்கிளுக்கான அறிவிப்பு போஸ்டரில் ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை கவனம் ஈர்த்துள்ளது.

ஏற்கனவே லியோ படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதாவது ஒரு சம்பவத்தை செய்துவிட்டு வேறு ஒரு நபராக காஷ்மீரில் விஜய் வாழ்வார். அவரது இருப்பிடத்தை தெரிந்துகொண்டு எதிரிகள் அங்கு வருவார்கள் என கூறப்பட்டது. இப்போது ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறதென்று கூறுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் ஆல்டர் ஈகோ என்றால் ஒரு விஷயத்தை செய்துவிட்டு தன்னுடைய அடையாளங்களை மறைத்து இன்னொருவராக வாழ்வது என்று அர்த்தம்.

இதற்கிடையே திரைப்படத்தில் சஞ்சய்  தத்தான் விஜய்க்கு தந்தை, அர்ஜுன் விஜய்க்கு சகோதரர். இதில் மூன்று பேருமே கேங்ஸ்டர்தான் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி என்ற பாடல் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நா ரெடிதா பாடலின் ப்ரோமோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நா ரெடிதா வரவா அண்ணன் நா இறங்கி வரவா என தொடங்கும் பாடலை விஜய் பாடியிருக்கிறார். மேலும் அந்த ப்ரோமோவில் பழைய விஜய்யை நியாபகப்படுத்தும் விதமாக இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற கேப்ஷனும் வருகிறது. தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், இந்தப் பாடலில் விஜய் 10 வருடங்களுக்கு முன்பு எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.