Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

சுவாரஸ்ய தகவல்கள்

வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்! தெறிக்க விடும் மாஸ் சம்பவங்கள்.. | Varisu Movie Deleted Scenes

Gowthami Subramani March 04, 2023

தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் நாள், தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமே வாரிசு ஆகும். இந்தப் படமானது தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜீ தயாரிப்பில் வெளிவந்தது. இதில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சுமன், பிரகாஷ் ராஜ், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையானது, படத்தின் தலைப்பிலிருந்தே அனைவருக்கும் புரியும்.

லவர்ஸ் டே ஸ்பெஷல் மூவிஸ்.. காதலர் தினம் டூ லவ் டுடே வரை.! | Lovers Day Special Movies in Tamil

Gowthami Subramani February 13, 2023

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது லவர்ஸ் டே அல்லது வேலண்டைன் தினம் என அழைக்கப்படுகிறது. உலகளவில் பல்வேறு இடங்களில் வேலன்டைன் தினத்திற்கென தனி ஒரு வரலாறே உள்ளது. அதாவது, சீனா, இங்கிலாந்து, இந்தியா, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளில் வேலன்டைன் தினத்திற்கு தனிச் சிறப்பு உள்ளது. இந்த சிறப்பு தினமான பிப்ரவரி 14, காதலர்களைக் கொண்டாடும் ஒரு முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில் காதலர்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறிக் கொள்வர். காதலர் தினத்தில் பார்க்க வேண்டிய சில திரைப்படங்களின் பட்டியல்களை இங்குக் காண்போம்.

அஜித்தின் ரீல் மகள்! முதல் படத்திலேயே இத்தனை முத்தக் காட்சிகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

UDHAYA KUMAR February 09, 2023

என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்குமார் மகளாக நடித்திருந்த நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஓ மை டார்லிங் எனும் பெயரில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனிகா. இந்த படத்தின் டிரெய்லர் காட்சியிலேயே பல முத்தக் காட்சிகள் வருவது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. மலையாள சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா சுரேந்திரன். கடந்த 2014ம் ஆண்டு அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. பின்னர் படவாய்ப்புகள் குறைந்தாலும் மீண்டும் தமிழில் அஜித் மகளாகவே நடித்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார், நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். மேலும் நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது நயன்தாராவாக நடித்திருந்தார். தமிழின் முதல் ஜாம்பி படமான மிருதனில் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்திரந்தார். கடைசியாக தமிழில் மாமனிதன் படத்தில் நடித்திருந்தார். இப்போது இவருக்கு 18 வயது ஆகிவிட்டது. இதனால் ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இவர் முதன்முதலில் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா படத்தில் இவர் நடித்திருந்தார். மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ஓ மை டார்லிங். இந்த படத்தின் டிரைலரில்தான் முத்தக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage Pics

Priyanka Hochumin February 08, 2023

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல் வாதியான கருணாஸ் அவர்களின் மகள் டயானாவின் திருமணம் சைலண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்து விட்டது. திருமணத்தில் அவர்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது.

Movies releasing this week இந்த வாரம் ரிலீஸ் தியேட்டர், ஓடிடி தகவல்கள்

UDHAYA KUMAR February 08, 2023

பொங்கலுக்கு அஜித்குமார், விஜய் படங்கள் ரிலீசாகி ஒன்றுக்கொன்று பலத்தைக் காண்பிக்க மோதின. வாரிசு படம் அதிக கலெக்ஷன்களையும், துணிவு படம் சராசரி கலெக்ஷன்களையும் பெற்றதாக வெளியில் நம்பவைக்கப்பட்டிருந்தாலும், பலருக்கும் பிடித்த படமாக துணிவு இருந்துள்ளது. வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட் என சீரியலை எடுத்து வைத்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் 7 படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கின. எனினும் அதில் இரண்டு படங்கள் தவிர மற்றவை பெரிய அளவில் பேசப்படவில்லை. சரி இந்த வாரம் கதைக்கு வரலாம். 

சிம்பு, கவுதம் மேனன் இடையில் சண்டையாம்! அப்ப VTK 2, VTV 2 கதி?

UDHAYA KUMAR February 08, 2023

கௌதம் மேனனும் சிம்புவும் இணைந்தால் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் கொஞ்சம் மகிழ்ச்சியடைவார்கள். காரணம் இவர்கள் கூட்டணியில் நல்ல படங்கள் கிடைக்கும் என்பதால் அவர்களும் மகிழ்வார்கள். இப்படித்தான் விண்ணைத் தாண்டி வருவாயா 2, வெந்து தணிந்தது காடு 2 ஆகிய படங்கள் விரைவில் உருவாகும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். ஆனால் இங்குதான் டுவிஸ்ட். சிம்புவுக்கும் கௌதமுக்கும் இடையில் பிரச்சனை வந்துள்ளதாம். விண்ணைத் தாண்டி வருவாயா 2, வெந்து தணிந்தது காடு 2 படங்கள் இனி வர வாய்ப்பில்லை என்கிறார்கள். சிம்பு, கௌதம் இருவருக்குள்ளும் சண்டை வந்து இருக்கிறதாம். இதனால் இருவரும் தனிப்பட்ட முறையில்கூட பேசுவதை நிறுத்திவிட்டார்களாம். இனி கௌதம் மேனன் படங்களில் சிம்பு நடிக்க மாட்டார் எனவும் சிம்புவுக்காக கௌதம் மேனன் கதையே எழுத மாட்டார் எனவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கரடுமுரடாக போய்க்கொண்டிருந்த சிம்புவின் சினிமா வாழ்க்கையில் நல்ல வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுத்தது வெந்து தணிந்தது காடு திரைப்படம்தான். கௌதமுடன் சேர்ந்தால் தான் நல்ல நடிகன் என்பதை சிம்புவே உணர்வார் போல. முதல் பாகத்திலேயே பின்னி பெடலெடுத்த சிம்பு இரண்டாவது பாகத்துக்காக காத்திருந்தாராம். உண்மையில் அந்த பாகத்தில்தான் சிம்புவின் நடிப்புப் பசிக்கு தீனி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருக்குள்ள பத்திக்கிச்சே. என்னதான் பிரச்னை என விசாரித்தால், அவர்களுக்குள் பிரச்னையே இல்லை, கௌதம் மேனன் இப்போது காஷ்மீரில் இருக்கிறார். இதனால் அடுத்த படம் குறித்து ஏதும் பேச முடியாத நிலை. விரைவில் அவர் சென்னை வந்ததும் சிம்புவிடம் கால்ஷீட் கேட்பார். அப்போது புரியும் இருவருக்கும் பிரச்னை இல்லை என்பது என கூறுகிறார்கள் சிம்புவின் தரப்பினர். ஆனால் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காத யாரோ இப்படி கிளப்பி விடுகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1996லேயே கோடிக் கணக்கில் வசூல் அள்ளிய கமல்ஹாசன்!

UDHAYA KUMAR February 08, 2023

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 1996ம் ஆண்டிலேயே இந்தியன் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் அள்ளியிருக்கிறது. இன்றைய நாள் கணக்கில் அது 300 - 350 கோடிக்கும் அதிகமான வசூலாக இருக்கும். லஞ்சம், ஊழலுக்கு எதிரான படமாக வெளிவந்து இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்ட படம் இந்தியன். இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மட்னோகர், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஜீவா ஒளிப்பதிவு செய்ய, லெனின், விடி விஜயன் படக்கலவையில் படம் பிரமாதமாக வந்திருந்தது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தியன் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றளவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. படம் வெளியான நாள் தொட்டு படத்தை சிலாகித்து பேசி, ஷங்கரை கொண்டாடித் தீர்த்தனர். இப்போது லோகேஷ் கனகராஜூக்கு இருந்த கிரேஸ் அப்போது ஷங்கருக்கு இருந்தது. ஏற்கனவே ஜெண்டில்மேன், காதலன் படங்கள் மூலம் தன்னை நிரூபித்திருந்த ஷங்கர், இந்தியன் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறினார். மூன்றாவது படத்திலேயே அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் கமல்ஹாசன். படம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பாசிடிவ் ரிவியூ கிடைக்க, அப்போதே உலகம் முழுக்க 61 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருந்தது இந்தியன் படம். இந்தியாவில் மட்டும் 53.7 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 27.76 கோடி ரூபாயும் வசூல் மழையாக பொழிந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே 20 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

PS 2 First single எப்போது வெளியாகிறது தெரியுமா? இதோ தகவல்!

UDHAYA KUMAR February 07, 2023

கமல்ஹாசன் குரலில் ஆரம்பித்த பொன்னியின் செல்வன், அருள்மொழி வர்மன் மரணித்ததாக சோழர் வம்சமே நிலைகுலைந்து நிற்கும் காட்சியும் முடிவுற்றது முதல் பாகம். ஆனால் அருள்மொழி வர்மனை ஊமைராணி காப்பாற்றி விடுகிறாள் என்பது படம் பார்த்த அனைவருக்குமே தெரிந்த விசயம்தான். இனி பார்ட் 2. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என படக்குழுவே அறிவித்துவிட்டது. வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது, பெரிதாக அப்டேட் எதுவும் வரவில்லையே என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்க துவங்கவிட்டனர். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என அனைவருக்கும் பாடல்கள் இருக்கின்றனவாம். முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஒரு பாடல் என்றாலும் மற்ற அனைத்து பாடல்களும் கார்த்திக்குதான் வந்தது. ஜெயம் ரவிக்கு பாடல்கள் இல்லை என்ற குறை இந்த இரண்டாம் பாகத்தில் தீர்ந்துவிடும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஆரம்பமே ஜெயம் ரவியின் காதல் பாடலோடு ஆரம்பமாகிறது. ஆம் ஜெயம் ரவி ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமான அருள்மொழி வர்மனுக்கான காதல் பாடல் வரும் காதலர் தினத்தன்று வெளியிடப்படுகிறதாம். பிப்ரவரி 14ம் தேதி காலை இந்த பாடல் வெளியிடப்படும் எனவும், இதில் ஜெயம்ரவி, ஷோபிதா நடித்திருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இந்த அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

ஒருவழியாக அந்த நடிகருக்கு திருமணம் நடக்கப்போகுது.. நிச்சயதார்த்தம் முடிந்ததாம்!

UDHAYA KUMAR February 07, 2023

பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் பிரபாஸ். இவருக்கும் திருமணம் நடக்கும் வாழ்த்து தெரிவிக்கலாம் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். மனுசன் பிடி கொடுக்காமல் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். பல ரசிகர்கள் இதற்காக வருத்தப்பட்டது கூட உண்டு. அவரோ இப்போது திருமணம் செய்வார், அப்போது திருமணம் செய்வார் என அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இடையில் அனுஷ்காவுடன் காதல், அவரையே திருமணம் செய்வார் என்றெல்லாம் புரளி கிளம்பியது. சில சமயங்களில் அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூட செய்தி பரவின. ஒரு வழியாக அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சலார் மற்றும் ஆதி புருஷ் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபாஸ் அடுத்தடுத்த வருடங்களில் மிகப் பெரிய வசூல் சக்ரவர்த்தியாக மாறுவார் என இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆதி புருஷ் படத்தில் நடித்துள்ள பிரபாஸ், அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சனோனுடன் காதலில் விழுந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் கீர்த்தி சனோனுக்கு பிரபாஸுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என ஒரு தகவல் இணையதளத்தை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. மாலத்தீவில் வைத்து இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை . இம்முறையும் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள். இது வெறும் புரளியாகத் தான் இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால் அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்போது அவரைத் தான் பிரபாஸ் திருமணம் செய்வார் என நம்பி வருகின்றனர். அவர்கள் நண்பர்கள்தான் இப்படி புரளி பரவி வருகிறது என அவர்களே சொன்னாலும் நம்ப மாட்டார்கள் போலிருக்கிறது. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க பிரபாஸ். பாகுபலி படத்தை உண்மைனு நம்பிட்டிருக்காங்க சிலர்!

AK 62 தாமதமாவதற்கான காரணம் இதுதான்? வெளியில் கசிந்த உண்மை என்ன?

UDHAYA KUMAR February 07, 2023

அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் படமானது. பலரும் இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினர். இந்நிலையில், இதை விட பெரிய படத்தைக் கொடுக்க வேண்டும் என அஜித் போட்டிருந்த கணக்கு எல்லாம் தவிடுபொடியானது. விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அஜித்குமார் 62 படத்தை இயக்குவது யார் என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் தொடங்கியிருந்தார் நிச்சயம் பொங்கல் முடிந்த கையோடு துவங்கி, பிப்ரவரியில் ஷூட்டிங்க் லோகேஷனுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதை ஆமோதிக்கும் வகையில் அவரே அஜித் புகைப்படத்தை தனது டிவிட்டர் கணக்கிலிருந்து நீக்கிவிட்டார். அஜித்குமாருக்கு விக்னேஷ் சிவன் மீது கோபம் என்றும் பலர் பேசி வருகின்றனர். இந்த கோபத்தை தணிக்க நயன்தாரா அஜித்திடம் பேசினாராம். ஆனாலும் அஜித் பிடி கொடுக்காததால், நேரடியாக லைகா தரப்பில் பேச முயன்றிருக்கிறார். அஜித்தை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கைவிரிக்கவே நயன்தாராவும் அப்செட் ஆகியிருக்கிறார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் நிச்சயம் ஒரு படம் செய்யட்டும் ஆனால் அஜித்தின் கோபத்துக்கு நாங்கள் ஆளாக முடியாது என கூறிவிட்டனராம். இதனால் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவும் வருத்தத்தில் இருக்கிறாராம். சரி இது இருக்கட்டும் அதுதான் அடுத்த இயக்குநரைத் தேர்ந்தெடுத்தாயிற்றே அதை ஏன் அறிவிக்கவில்லை என கேட்டதற்கு அதற்கும் ஒரு முட்டுக்கட்டை இருப்பது தெரியவந்துள்ளது. மகிழ் திருமேனிதான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அதை அறிவிக்க ஏன் தாமதம் என அஜித் தரப்பில் விசாரிக்க முயன்றோம். ஆனால் யாரும் பிடி கொடுக்காததால் தயாரிப்பு தரப்பில் விசாரிக்க முடிவு செய்தோம். அங்கு இருந்த வந்த தகவலின்படி, அஜித் இன்னும் ஸ்ட்ராங்கான ஸ்க்ரிப்டை எதிர்பார்க்கிறார் என்கிறார்கள். அவர் இந்த கதையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் சண்டை என இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம். மகிழ் திருமேனியும் அதற்கு சம்மதித்து கதையை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.