Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி

Saraswathi Updated:
2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி Representative Image.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மஞ்சள் கலர் ஜெர்சியை மறந்து, ப்ளூ கலர் டீ-சர்ட்டிற்கு மாறி ஆதரவு அளிப்போம் என்று லைக்கா கோவை கிங்ஸ் விளம்பர தூதுவரும் நடிகருமான சதீஷ் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று மதுரை மற்றும் கோவை லைக்கா கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிகளை, தூத்துக்குடியில் கோவை லைக்கா கிங்ஸ் அணியின் செயல் தலைவர் சிவக்குமரன் ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி விகாச பள்ளியில் ரசிகர்கள் பார்ப்பதற்கான பேன் பார்க் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

இதில், கோவை லைக்கா கிங்ஸ் அணியின் விளம்பர தூதரும் நடிகருமான சதீஷ் கலந்து கொண்டு, கோவை லைகா கிங்ஸ் ரசிகர்களுடன் அமர்ந்து பெரிய திரையில் போட்டியை கண்டு களித்து உற்சாகப்படுத்தினார். இந்தப் போட்டியில் கோவை லைக்கா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகர் சதீஷ், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு பின்பு தமிழ்நாடு பிரிமியர் கிரிகெட் லீக் துவங்கப்பட்டு தற்போது அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு சிறந்த வீரர்கள் உருவாக்கப்பட்டு தேர்வாகின்றனர். அதே போன்று 2011 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும்போது வெற்றி பெற்றோம். இந்த ஆண்டும் உலகக் கோப்பை போட்டிகள் நம் நாட்டில் நடைபெற உள்ளது. அதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி என்றாலே இதுவரை மஞ்சள் கலர் ஜெர்சியில் கலந்து கொண்டு ஆதரவளித்து நாம் பழகி விட்டோம். ஆனால், தற்போது மஞ்சள் கலர் ஜெர்சியில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. எனவே, நாம் ப்ளூ கலர் ஜெர்சிக்கு ஆதரவளிக்க உள்ளோம். 

மாமன்னன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கண்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோன்று வடிவேலுவும் நன்றாக நடித்துள்ளார். ஏற்கனவே தேவர் மகன்  எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடிகர் வடிவேலு தனது குணச்சித்திர நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று, தற்போது மாமன்னன் படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்