Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு.

selvarani Updated:
சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் -  நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு.Representative Image.

நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவி பவித்ரா, சோப்பில் புத்தர் சிலை, விநாயகர் சிலை, ஆமை, மீன், பூக்கள் என பல்வேறு வடிவங்களை அமைத்து அசத்தி வருகிறார்.

கழிவு பொருட்களை தூக்கி வீசாமல் உபயோக பொருளாக மாற்றும் புதுமையான முயற்சியில் இளைய தலைமுறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வீட்டில் குளிக்க பயன்படுத்தும் நறுமண சோப்பில் வித விதமான அலங்கார பொருட்களை தன்னுடைய கைவண்ணத்தில் உருவாக்கி பிரம்மிக்க வைக்கிறார் கல்லூரி மாணவி ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகள் பவித்ரா, படிக்கும் போதே ஓவியங்கள் வரைவது சின்ன வண்ண பேப்பரில் மலர்கள் செய்து ரசிப்பது என அவரது பொழுதுபோக்காக இருந்தது. குறிப்பாக அதிக அளவில் சாமி படங்களை ஓவியங்களாக வரைந்து உள்ளார். நறுமண சோப்பில் ஏதாவது பொருட்கள் செய்யலாம் என கல்லூரி மாணவிக்கு எண்ணம் தோன்றியது. இதனைத் தொடர்ந்து நறுமண சோப்பில் புத்தர் சிலையை செய்ய தொடங்கினார்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் புத்தர் சிலையை வடிவமைத்துள்ளார். சோப்பில் புத்தர் சிலை செய்த பிறகு வெள்ளை நிற சோப்பில் விநாயகர் சிலை, ஆமை, மீன், பூக்களையும் உருவாக்கி உள்ளார். இந்த வடிவத்தை உருவாக்க கத்தியை உளியாக பயன்படுத்தி உள்ளார் கல்லூரி மாணவி. சோப்பின் வாசனையும் நறுமணமாக இருந்ததால் அதில் பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்ய துவங்கினார். இந்த பொருட்களை வீட்டில் அலங்காரமாகவும் வைத்துள்ளார். இதனால் வீட்டுக்குள் எப்போதும் நறுமணம் வீசியபடி இருக்கும் இதுபோல் பிற பொருட்களிலும் திறமைகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்.

கோவில் திருவிழா மட்டும் கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்லும்போது அரிசி சாக்பீஸ் ஆகியவற்றில் பெயர் எழுதுவதை பார்த்து அவற்றிலும் பல்வேறு பொருட்களை வடிவமைக்க துவங்கினார். பொன்னி அரிசி, பிரியாணி அரிசி போன்றவற்றில் பெயர்கள் எழுதுவது ஓவியம் வரைவது போன்ற செயல்பாட்டிலும் மாணவி ஈடுபட துவங்கினார். வெள்ளை பேப்பரில் காகித பொம்மைகள் குங்கும சிமிழ். பெண் பொம்மை பாண்டா கரடிகள் ஆகியவற்றின் உருவாக்கி உள்ளார் அதில் பினியன் பொம்மையை விரும்பி செய்துள்ளார். கல்லூரி மாணவி பவித்ராவின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்