Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?

Aruvi Updated:
மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?Representative Image.

சென்னை: கேஜிஎஃப் படத்தில் நடித்து புகழடைந்த யஷ் மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார்.

களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் யாஷ். திரையுலகில் நிலைத்து நிற்க பல வருடங்கள் போராடிய யாஷுக்கு எந்த படமும் பிரேக் கொடுக்காமல் இருந்தது. இருப்பினும் தனது விடா முயற்சியை அவர் விடவே இல்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார்.  எப்படியாவது திரையுலகில் பெரிய ஸ்டாராக வேண்டுமென்ற வேட்கை அவரிடம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது.

இப்படி வேட்கையோடு ஓடிக்கொண்டிருந்த யாஷுக்கு கேஜிஎஃப் படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. பிரசாந்த் நீல் இயக்கிய அந்தப் படம் கோலார் தங்க வயல் பற்றி எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் யாஷின் நடிப்பும், வசன உச்சரிப்பும், உடல்மொழியும் ரசிகர்களை கட்டிப்போட்டன. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. தமிழிலும் அந்தப் படம் டப் செய்யப்பட்டது. கன்னடத்தில் எப்படி பெரும் வெற்றி பெற்றதோ அதேபோல் தமிழிலும் வெற்றி கண்டது. அதன் பிறகு யாஷ் ராக்கி பாயாக மாறினார்.

கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு பிறகு யாஷ் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீலே இயக்கினார். இந்த முறை கேஜிஎஃப் பான் இந்தியா படமாக உருவானது.  படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்தார். படம் எதிர்பார்த்தபடியே இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெற்றி மட்டுமின்றி பெரும் வசூல் வேட்டையையும் நிகழ்த்தியது. இந்தப் படமானது 1000 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது அந்தப் படத்துடன் விஜய் நடித்திருந்த பீஸ்ட் படமும் வெளியானது. பீஸ்ட் படம்தான் வெற்றி பெறும் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் யாரும் நினைக்காதவகையில் பீஸ்ட் படத்தை அசால்ட்டாக காலி செய்தது கேஜிஎஃப் 2. இதனால் தமிழ்நாட்டிலும் ராக்கி பாயின் கொடி உயரமாகவே பறந்தது.

இந்நிலையில் நடிகர் யாஷ் நேரடி தமிழ் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, நேரடி தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கும் யாஷ், அதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டுவந்தாராம். தற்போது ஒரு இயக்குநரை இறுதி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவில் ஜூலை 8ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் அவர் எம்சி கோல்டு ஜுவல்லரியின் இரண்டாவது கிளையை திறந்து வைக்க இருக்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை