லியோ படத்திலிருந்து விலகிய த்ரிஷா? உண்மை என்ன?

போன வேகத்தில் திரும்பி வந்ததால் லியோ படத்திலிருந்து திரிஷா விலகியுள்ளாரா எனும் கேள்வி இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

நடிகை திரிஷாவுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் த்ரிஷா லியோ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் எழுதி வருவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மை என்ன என்பது குறித்து நமது டீம் விசாரணையில் இறங்கியது. அப்படி கிடைத்த சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்த படமான தளபதி 67 க்குள் நுழைந்தார். ஆனால் இந்த படத்தின் அப்டேட் குறித்து எதுவும் பேசாமலே இருந்து வந்தது படக்குழு. இந்நிலையில், ஜனவரி 30ம் தேதி முதல் அடுத்தடுத்து அப்டேட்டைகளை அள்ளி விட்டனர். 

சோசியல் மீடியாவே திணறும் வகையில்  தளபதி 67 படத்துக்கு அப்டேட்கள் வந்துகொண்டே இருந்தன.  நடிகர், நடிகைகள், பூஜை வீடியோ, ப்ரோமோ வீடியோ, டைட்டில், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்து வெளியான அப்டேட்களால் சமூக வலைத்தளங்களே திணறின. 

கோபத்தில் திரிஷா!

இதனைத் தொடர்ந்து படத்தின் கதை குறித்த கேள்வி எழுந்தது. சமூக வலைத்தளங்களில் கைதி, விக்ரம் படங்களை வைத்து பல கதைகளை உருவாக்கி உலாவவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இத்துடன் திரிஷா பற்றிய வதந்தி செய்தி ஒன்றையும் பரவ விட்டிருக்கின்றனர். 

விஜய், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளில் இந்த படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். லியோ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் சோனி மியூசிக் நிறுவனத்துக்கும், தொலைக்காட்சி உரிமம் சன்டிவிக்கும், ஓடிடி உரிமம் நெட்ஃபிளிக்ஸுக்கும் தரப்பட்டுள்ளது. 

உண்மை என்ன?

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட த்ரிஷா போன வேகத்திலேயே திரும்பி சென்னை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் சென்று ஒரே நாளில் திரும்பியதால் லோகேஷுக்கும் திரிஷாவுக்கும் சண்டை என வதந்தி பரவியுள்ளது. 

வழக்கமாக லோகேஷ் பட ஹீரோயின்கள் 2 சீன்களிலேயே கொல்லப்பட்டுவிடுவார்கள். இதனையும் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். 

முன்னதாக லியோ படத்தைப் பற்றிய பல டிவீட்டுகளை ஷேர் செய்த த்ரிஷா, பின் யாருடைய வேண்டுகோளுக்கு இணங்கவோ அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். இதனை சண்டை என கிளப்பி விட்டுள்ளனர் சிலர். திரிஷா இந்த படத்திலிருந்து விலக வில்லை. அவர் இன்னும் காஷ்மீரில்தான் இருக்கிறார். 

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.