லவர்ஸ் டே ஸ்பெஷல் மூவிஸ்.. காதலர் தினம் டூ லவ் டுடே வரை.! | Lovers Day Special Movies in Tamil

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது லவர்ஸ் டே அல்லது வேலண்டைன் தினம் என அழைக்கப்படுகிறது. உலகளவில் பல்வேறு இடங்களில் வேலன்டைன் தினத்திற்கென தனி ஒரு வரலாறே உள்ளது. அதாவது, சீனா, இங்கிலாந்து, இந்தியா, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளில் வேலன்டைன் தினத்திற்கு தனிச் சிறப்பு உள்ளது. இந்த சிறப்பு தினமான பிப்ரவரி 14, காதலர்களைக் கொண்டாடும் ஒரு முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில் காதலர்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறிக் கொள்வர். காதலர் தினத்தில் பார்க்க வேண்டிய சில திரைப்படங்களின் பட்டியல்களை இங்குக் காண்போம்.
 

காதலர் தினம்

1999 ஆம் ஆண்டு வெளிவந்த காதலை மையமாகக் கொண்டு அமைந்த திரைப்படமே காதலர் தினம் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் தனது காதலை வெளிப்படுத்துவது முதல் இறுதிக் காட்சி வரை அனைத்துமே சுவாரஸ்யமாக இருக்கும்.

விண்ணைத்தாண்டி வருவாயா

நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படமானது காதலை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் தற்போதைய ஜெனரேஷனுக்கு அத்துபடி. இந்த காதல் படத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.
 

வாரணம் ஆயிரம்

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படமானது காதலிப்பது குறித்தும், காதலிக்கும் நபர் உடன் இல்லை என்றால் இன்னொருவரின் நிலைமை குறித்தும் அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்த சூர்யாவின் காதல் வாழ்க்கை அனைவருக்கும் காதல் பற்றிய சுவாரஸ்யத்தைத் தந்துள்ளது.
 

96

பள்ளிக் கூட லவ் என்றாலே, அதற்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். எல்லா வயது காதலை விட, இந்த வயதில் வரும் காதலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த வயதில் காதலிக்கும் நபர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தி அதனை நீண்ட காலத்திற்குக் கொண்டு செல்கிறார்களா.? என்பதில் தான் முக்கியத்துவம் உள்ளது. அப்படிப்பட்ட காதல் கதை தான் இந்த  96 திரைப்படக் கதை. இந்த படத்தின் கதையைப் பொறுத்த வரை தற்போது பெரும்பாலானோர் வாழ்க்கையில் நடந்ததாகவே அமையும்.

ரெமோ

ஒன் சைடு காதலை டபுள் சைடு காதலாக மாற்ற முயற்சிக்கும் ஹீரோ. அதற்காக, ஹீரோ தனது வடிவத்தை மாற்றியதுடன் பல்வேறு கட்ட முயற்சிகளைச் செய்வார். இது ஒருவர், தனது காதலை வெற்றி பெற எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைகிறது.
 

லவ் டுடே

இப்படி பல்வேறு கட்ட படங்களுக்கு மத்தியில் இன்றைய காதலன், காதலிக்கு இடையே வரும் சந்தேகங்களுக்கு முடிவு கட்டும் விதமாக இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனால் வெளிவந்த திரைப்படமாகும். இதில் வரும் சீன்கள் அனைத்தும் நவீன காதலர்களுக்கிடையே நடப்பதை எடுத்துக் கூறும் வகையிலேயே அமைகிறது. ஏமாற்றம், பொய் என எல்லாவற்றையும் தாண்டி நம்பிக்கை தான் ஒருவரது காதலை தீர்மானிக்கும் வகையில் அமையும் என்பதை எடுத்துக் கூறும் கதையாக இந்தப் படம் உள்ளது.

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.