வாரிசு, துணிவு முன்பதிவு எப்போது?

விஜய் நடிப்பில் வம்சி இயக்கியுள்ள படம் வாரிசு. இந்த படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அஜித் நடித்துள்ள படம் துணிவு. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இன்னும் முன்பதிவு ஏன் துவங்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்த தகவல் தெரியவந்துள்ளது. தியேட்டர்கள் இன்னும் முறையாக ஒதுக்கப்படாததே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இரண்டு படங்களின் முதல் காட்சிகள் எப்போது எந்த நேரத்தில் வெளியாகும் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுமா வெவ்வேறு நேரங்களில் என்றால் எந்த படம் முதலில் வெளியாகும் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். இதனிடையே இதுகுறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. 

துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படும் என கூறப்படுகிறது. வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை இதில் மாற்றம் வந்தால் ஒரே நேரத்தில் இந்த இரு படங்களும் வெளியாகலாம். அப்படி வெளியாகும்பட்சத்தில் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படலாம். 

அதே நேரம் தெலுங்கு பதிப்பான வாரசுடுவை ஜனவரி 11ம் தேதியே வெளியிட்டால் படத்தின் வசூல் பாதிக்கப்படும். பண்டிகை தினங்களில் வெளியிடவேண்டும் என்பதால் ஜனவரி 14ம் தேதி வெளியிடவுள்ளனர். அதுமட்டுமின்றி போட்டிக்கு நேரடி தெலுங்கு படங்களும் வரவுள்ளதால், வாரசுடு படத்தின் வசூல் பாதிக்கும். இதனாலேயே ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. 

மதுரையில் மட்டும் இப்போது சில திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. அதேநேரம் மற்ற நகரங்களிலும் சிறுநகரங்களிலும் விரைவில் முன்பதிவு துவங்கும் என கூறப்படுகிறது. வரும் திங்கள் மாலை முதல் அனைத்து திரையரங்குகளிலும் நிச்சயமாக முன்பதிவு துவங்கிவிடும் என கூறுகிறார்கள். 

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.