நிறுவனத்தின் அசத்தல் செயல்...கட்டு காட்டாக பணம்...ஊழியர்களுக்கு பண மழை!

கடந்த சில வருடங்களாக கொரோனாவால் பல நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் உலகத்தில் பொருளாதாரத்தில் முதலில் இருக்கும் நாடுகளுக்கு மட்டும் அது விதிவிலக்கல்ல. ஆனால் சீனாவில் இருக்கும் ஒரு நிறுவனம் அதிக வருவாயை ஈட்டி தங்களின் ஊழியர்களுக்கு பண மழையால் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்த முழு தகவலையும் இந்த பதிவில் பாப்போம்.

சீனா ஹெனான் மாகாணத்தில் ஹெனன் மைன் என்ற நிறுவனம் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கிரேன் போன்ற கனரக வானங்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். வருவாயில் கொடி கட்டி பறந்து வரும் இந்த நிறுவனம் கொரோனா சமயத்திலும் கூட 23% அதிக வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 5,100 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஒரு ஆண்டின் வருமானமாக இந்நிறுவனம் 9.16 பில்லியன் யுவான் ( அதாவது 1.1 பில்லியன் டாலர்) ஈன்று வருகிறது.

எனவே, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயலாது உழைக்கும் ஊழியர்களை மகிழ்விக்க, கடந்த 17 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது மேடையில் மலை போல பண கட்டுகளை அடிக்கி வைத்து அதனை தொழிலாளிகளுக்கு பரிசாக தருவதாக கூறினர். சிறப்பாக பணியாற்றிய மூன்று சேல்ஸ் மேனஜர்களுக்கு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக கொடுத்துள்ளது. மேலும் சிறப்பாக வேலை செய்த ஊழியர்கள் 40 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவானிற்கு மேலாக போனசாக தந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் பணத்தை என்னும் போட்டி ஒன்றை வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பணத்தை பரிசாகவும் தந்துள்ளனர்.

இப்படி மொத்தம் 12 மில்லியன் யுவான் தொகையை போனஸாக ஒத்திவைத்துள்ளனர். இது மட்டும் இன்றி ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 சதவீதம் சம்பள உயர்வு தந்து அவர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளனர்.

Show comments

தொடர்பான செய்திகள்

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு .

டிவிட்டர் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு: எலான் மஸ்க் அதிரடி.

பிரான்ஸில் 17வயது சிறுவன் சுட்டுக்கொலை: வன்முறைக்கு அதிபர் கண்டனம்...!.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் - ரஷ்யாவை தீர்த்துகட்ட அமெரிக்கா உதவி | Russia Ukraine War.