Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரான்ஸில் 17வயது சிறுவன் சுட்டுக்கொலை: வன்முறைக்கு அதிபர் கண்டனம்...!

Baskarans Updated:
பிரான்ஸில் 17வயது சிறுவன் சுட்டுக்கொலை: வன்முறைக்கு அதிபர் கண்டனம்...!Representative Image.

பிரான்சிஸ் ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்கள் மற்றும் அமைதியின்மைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் தலைநகரான மேற்கு பாரீஸ் புறநகர் பகுதியான நான்டெர்ரே என்ற பகுதியில் 17வயது சிறுவன் காரில் சென்றுக் கொண்டிருந்தான். வாடகைக்கு கார் எடுத்துச் சென்ற சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் சென்ற போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெரிகிறது.

இதனால் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை நிறுத்த முயன்றனர். அப்போது ஒரு நிமிடம் மட்டுமே காரை நிறுத்திய சிறுவன் உடனே காரை எடுத்துள்ளான். அப்போது போலீசார் துப்பாக்கியால் சிறுவனை சுட்டனர். இதில் கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. போலீசார் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சிறுவனை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கார்கள், காவல் நிலையம் உள்ளிட்டவைகளுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டகாரர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில் வன்முறை மோதல்கள் மற்றும் அமைதியின்மைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்