Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57
Exclusive

டிவிட்டர் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு: எலான் மஸ்க் அதிரடி

Baskarans Updated:
டிவிட்டர் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு: எலான் மஸ்க் அதிரடிRepresentative Image.

சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளமான, 'டிவிட்டர்' பயன்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 டிவிட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் கடந்தாண்டு விலைக்கு வாங்கினார். அன்றுமுதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தன்னை அறிவித்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

இதில் முதற்கட்டமாக 75 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதோடு, டிவிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் விதிப்பது உள்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார். இப்படி பயனர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியை அளித்து வரும் எலான் மஸ்க் நேற்று முன்தினம் டிவிட்டர் பயன்படுத்துபவர்களுககு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

அதாவது, டிவிட்டர் நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ள அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள், 6,000 பதிவுகளையும், அங்கீகரிக்கப்படாதவர்கள், 600 பதிவுகளை மட்டும் ஒரே நாளில் பார்க்க முடியம் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து 10 ஆயிரம் பதிவுகளாகவும், 1,000 பதிவுகளாகவும் உயர்த்தி அறிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிவிட்டர் வலைதளத்தில் கணக்கு வைக்காதவர்களும் பதிவுகளை பார்க்கும் வசதி இருந்தது. இனி, பயனாளர்கள், பதிவுகளை பார்ப்பதற்கு, சமூக வலைதளத்துக்குள் பதிவு செய்து நுழைய வேண்டும்.

குறிப்பாக சமூக வலைதளத்தில் அதிகளவில் பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பலரும் தொடர்ச்சியாக அதிகளவில் தகவல்களை குவித்து வருவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, அதிகளவில் பதிவுகளை பார்த்து பழகிய சிலர், தங்களால் டிவிட்டர் பதிவுகளை பார்க்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக புகார் எழுப்பியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்