Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Baskaran Updated:
பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு Representative Image.

பிரான்ஸ் தேசிய தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பிரான்சில் தேசிய தினம் நாளை கொண்டாடப்படுகிறது.இதில் கெளவுர விருந்திரனாக கலந்து கொள்ள அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற பிரதமர் இன்று விமானம் மூலம் பிரான்ஸ் சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு, எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த தேசிய தின விழா கொண்டாட்டத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினருடன், இந்தியாவின் முப்படையைச் சேர்ந்த 269வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் போது பிரான்ஸிடம் இருந்து கடற்படை பயன்பாட்டிற்காக 26ரபேல் விமானங்களும், கூடுதலாக 3ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இது சுமார் ரூ.90ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு திரும்பும் மோடி, வழியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜூலை 15ஆம் தேதி செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபரும், அரசருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்