பெண்கள் நலனில் ஸ்பெஷல் கேர் எடுக்கும் திமுக அரசு; அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்! 

தமிழகத்தில் பெண்ணுரிமை காக்கப்பட வேண்டும் எனவும் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு அடித்தளமாக 1989இல் முதன் முதலில் சுய உதவி குழுக்களை அமைத்தவர் கலைஞர் கருணாநிதி என திமுக அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுய உதவிக் குழு  மூலம் 1124 குழுக்களுக்கு ரூபாய் 29.61 கோடி கடன் பெற்ற 12558 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவும்  மற்றும் 
5 கிலோ மற்றும்  2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 21 பயனாளிகளுக்கு ரூபாய் 44.33 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக   சிறு குறு மற்றும்  நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சியில் பேசுகையில், பெண்களுக்கென தன்னறிவில்லா திட்டங்களை கொண்டு வந்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிய இருப்பது திமுக ஆட்சியில் தான். பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு, கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாதம் பொது விடுப்பை தற்பொழுது தமிழக அரசு அதை 12 மாதமாக உயர்த்துள்ளது. 

அறநிலைத்துறையில் பெண்களுக்கு அறநிலைப் பொறுப்புமற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, உள்ளாட்சி மன்றங்களில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என எல்லா திட்டங்களிலும் மக்கள் மற்றும் பெண்களின் நலனில் திமுக அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. 

பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் வருமானத்தை பெருக்கிடவும் குடும்ப நலம் காத்திடவும் முதன் முதலில் 1989இல் தர்மபுரியில் பெண்கள் சுய உதவி குழுவை ஆரம்பித்தது டாக்டர் கலைஞர் முதலமைச்சரா இருந்த  திமுக அரசு தான் என்றும் இவ்வாறு பேசினார் இவ்விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Show comments

தொடர்பான செய்திகள்

ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!.

மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார்..! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!.

அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை .