Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57

அரசியல்

ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!

Baskaran. S July 21, 2023

சென்னை: ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கூட்டம் இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பாக உயர்கல்வி வட்டாரங்கள் கூறும்போது, அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் எம் ஐ டி கல்லூரியில் முதல்வராக இருப்பவர். ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவரை, பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டுமென,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜிடம் கேள்வி எழுப்பினார். அதனை சுட்டிக்காட்டி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோரை குழு அமைத்து, அதன் மூலமே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் போதிய நிதி இல்லை என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு போதுமான நிதி வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் வேல்ராஜ். பல்கலைக்கழகங்களிடமிருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு எடுத்துக் கொண்டது போலவே, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல் அவர் பேசினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொள்ளட்டும். அதேபோல் எம்ஐடி மற்றும் ஏ சி டெக் கல்லூரிகளையும் அரசே எடுத்துக் கொள்கிறோம். வருமானம் வரும் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகமே வைத்துக் கொள்ள வேண்டும்; வருமானம் இல்லாதவற்றை அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமா என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியாக தெரிவித்த உயர் கல்வித் துறை வட்டாரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்றும், விரைந்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவித்தன. மேலும், ஆளுநர் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்க வேண்டும் என்ற அவசியம் துணைவந்தர்களுக்கு இல்லை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் தேதி மட்டும் தான் கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்களே முடிவு செய்யலாம் என , துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாகவும், அதேபோன்று,  யுஜிசி செல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற தேவை இல்லை் மாநிலத்தில் என்ன சூழ்நிலை நிலவுகிறதோ அதற்கு ஏற்றார் போல தான் செயல்பட முடியும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாகவும்,தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார்..! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

Chandrasekar July 20, 2023

மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மனதை பாதிக்கும் வகையில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் இப்போது பிரதமர் மோடி வாய் திறந்து உள்ளார். கடைசியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை எப்போது நடத்தினார்கள் என்று பாருங்கள். மணிப்பூர் விவகாரம் இப்போது மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது பிரதமருக்கு இப்போது தெரிந்து விட்டது இந்த முறை வெற்றி பெறுவது கடினம் தான் என்று. பிரதமர் மோடியின் அடிமை எடப்பாடி பழனிசாமி தான் என்பதால் அவர்தான் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் அழைக்கவில்லை என்று ஓ.பி.எஸ்.,மற்றும் டி.டி.வி.க்கு கோபம். மிகப்பெரிய அடிமை நான் என்னை கூப்பிடவில்லை என்று டி.டி.வி.க்கு கோபம். உண்மையான அடிமை நான் என்னை கூப்பிடவில்லை என்று ஓபிஎஸ்-க்கு கோபம். யார் அடிமை என்பதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். மத்தியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை விட யார் ஆட்சி செய்யக்கூடாது என்பது தான் முக்கியம். பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முதல் நோக்கம். இவ்வாறு, உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!

Baskaran July 17, 2023

அமைச்சர் பொன்முடி வீட்டில் ஏன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர் என்ற காரணம் தெரியவந்துள்ளது. தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி விகிப்பவர் பொன்முடி. இவருக்கு சொந்தமான வீடு, அலுவலம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சரின் மகன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை

Baskaran July 17, 2023

செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் விடுவிக்கப்பட்டார்.

சொன்னதை மட்டுமல்ல.. சொல்லாததையும்.. நான் செய்வேன்.. - கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Baskaran July 15, 2023

மதுரை: ரூ.216கோடி மதிப்பில் சர்வதேச டிஜிட்டர் தரத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  பின்னர்  அவர் விழாவில்  பேசியதாவது, சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும், நான் செய்வேன் என்பதற்கு, எடுத்துக்காட்டு தான் சென்னையில் கருணாநிதி பெயரில் மருத்துவமனையும், மதுரையில் நுாலகமும். தமிழகத்தின் தலைநகர் சென்னை என்றால், கலைநகர் மதுரை. தலைநகரில், அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவின்போது, அவரது, பெயரில் கருணாநிதி நுாலகம் அமைத்து கொடுத்தார். தற்போது, கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், அவரது பெயரில், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை, இரண்டும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், நுாலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும். இந்நுாலகம் வாயிலாக, இனி அறிவுத்தீ பரவும். நுாலகம் பிரமாண்டமாக அமைய காரணமான அதிகாரிகள், ஊழியர்களுக்கு என் பாராட்டுக்கள். ஐ.டி., நிறுவனமான எச்.சி.எல்., நிறுவனர், அரசு பள்ளியில் படித்து, சொந்த முயற்சியில் நிறுவனம் துவங்கி, 2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளார். இலக்கியம், பத்திரிகை, சினிமா என, அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி. அவரே, ஒரு நுாலகம் தான். தி.மு.க., என்பது அரசியல் மட்டுமல்ல, அறிவு இயக்கம். கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திட்டங்கள், கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. தி.மு.க., ஆட்சியில் தான், கல்வி புரட்சி உருவானது. காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக, கருணாநிதி தான் அறிவித்தார். தி.மு.க., முதல்முறை ஆட்சிக்கு வந்தபோதே, ஏராளமான கல்லுாரிகள் உருவாக்கப்பட்டன. தரமான கல்வி வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.முதலிடத்தை பிடிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிக்கும்போது கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நாளைய எதிர்காலம் நீங்கள் தான். இவ்வாறு, அவர் பேசினார். 

மதுரையின் மற்றொரு அடையாளமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Baskaran July 15, 2023

மதுரை: ரூ.216 கோடி மதிப்பில் சர்வதேச டிஜிட்டல் தரத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.  மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பில் 2.13 லட்சம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டும் பணிகள் தொடங்கி இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் கலைநயமான நுழைவு வாயில், வண்ணமையமான வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு தளங்கள், கலைஞர் சிரித்த முகத்துடன் அவரது உருவம் கொண்ட ஜெர்மன் தொழில்நுட்பத்திலான கண்ணாடி முகப்பு, புத்தகம் படிக்க அமைதியான அறைகள், 2.50லட்சம் புத்தகங்கள் என மதுரை மக்களுக்கு அனைத்து ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  வாகன நிறுத்துமிடம், நாளிதழ்கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவு கொண்ட அடித்தளம், கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், விஐபி அறை, சொந்த நூல் படிக்கும் அறை, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, தபால் பிரிவு உள்ளிட்டவை தரைத்தளத்தில் உள்ளது.   கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் நுாலகம், சொந்த நுால்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு கொண்ட முதல்தளம், தமிழ் நுால்கள் பிரிவு கருணாநிதியின் நினைவை போற்றும் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கியதாக இரண்டாம் தளம் அமைந்துள்ளது. மூன்றாவது தளத்தில் ஆங்கில நுால்கள், ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நுால்கள் பிரிவுகள், நான்காவது தளத்தில் 30 ஆயிரம் புத்தகங்களுடன் போட்டித் தேர்வர்களுக்கான பிரிவு, ஐந்தாம் தளத்தில் அரிய வகை நுால்கள், மின் நுாலகம், பல்லுாடகம், ஒளி ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நுால், ஒலி நுால் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைந்துள்ளன. ஆறாவது தளத்தில் ஆங்கில நுால்கள் (இரவல் பிரிவு), நுால் பகுப்பாய்வு, நுால் பட்டியல் தயாரித்தல், நுாலக நிர்வாகம், நுால்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தின் உட்பகுதிகளில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, ஆறு மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள், வளாகத்தின் நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகை கண்ணாடி பேழையிலான 'ஹைடெக்' கூடாரம் என நுாலகம் ஜொலிக்கிறது.

வரும் 27ம் தேதி இருளர் குடியிருப்பு திறப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு!

Selvarani July 15, 2023

திருப்போரூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட இருளர் குடியிருப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 27 ம் தேதி திறந்து வைக்க உள்ள நிலையில், அந்த இடத்தினை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  ஆய்வு மேற்கொண்டார்.  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாமதி ஊராட்சியில் இருளர் பழங்குடியின மக்களுக்காக நல்லம்மை ராமநாதன் அறக்கட்டளை நிறுவனர் அபிராமி ராமநாதன் தனது சொந்த நிதியிலிருந்து மானாம்பதி குயில் குப்பம் நகரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எல்இடி தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், மெத்தை, சோபா செட் உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளடக்கிய 64 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த குடியிருப்பினை வரும் 27ஆம் தேதி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த குடியிருப்பு பகுதியினை தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதி மக்களின் பல்வேறு குறைகளை கேட்டதுடன் அனைத்து தேவைகளும் உடனடியாக சரி செய்து தரப்படும் என கூறினார்.  இந்த ஆய்வின்போது திருப்போரூர் சேர்மன் எஸ்.ஆர். எல். இதயவர்மன், திருப்போரூர் ஆத்ம குழு தலைவர் பையனூர் சேகர், பேரூராட்சி தலைவர்கள் தேவராஜ், யுவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்.. கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்பு!

Saraswathi July 15, 2023

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக இன்று காலை மதுரை புறப்படுகிறார். இன்று மாலை அங்கு நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.  கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் திறப்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து காலை 8.45 மணிக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 மணிக்கு பழவந்தாங்கல் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையம் செல்லும் முதலமைச்சர் காலை 10 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, நண்பகல் 11.25 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து கார் மூலம் மதுரை சர்க்கியூட் ஹவுசுக்குச் சென்று ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு விழாவிற்குச் சென்று, மாலை 4.30 மணிகு நூலகத்தை திறந்துவைக்கிறார். பின்னர், மதுரை ஏ.ஆர். மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று பேசுகிறார். அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு 8.55 மணிக்கு  மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Baskaran July 13, 2023

தென்காசி: தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் காங்.வேட்பாளர் பழனி நாடார் வெற்றி உறுதியானது. தமிழக சட்டச்சபைக்கு கடந்த 2021இல் தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், அதிமுக சார்பில் செல்வ மோகன்தாஸ் என்பவர் போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிப்பெற்றார்.இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 370மட்டுமே ஆகும். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை எதிர்த்தும், தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று தென்காசி தொகுதியில் பதிவான 2589 தபால் வாக்குகளை எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்காக அந்த தொகுதியில் போட்டியிட்ட 17வேட்பாளர்களும் வந்திருந்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த வாக்கு எண்ணிக்கைக்கு,200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தபால் வாக்கு எண்ணிகை முடிவில், 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு 3 பேருக்கு பொருந்தாது - முன்னாள் அமைச்சர்

Baskaran July 12, 2023

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது அமைதி பூங்காவாகவும், தற்போது அமளி பூங்காவாகவும் மாறியுள்ளது.