மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மனதை பாதிக்கும் வகையில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் இப்போது பிரதமர் மோடி வாய் திறந்து உள்ளார். கடைசியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை எப்போது நடத்தினார்கள் என்று பாருங்கள்.
மணிப்பூர் விவகாரம் இப்போது மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது பிரதமருக்கு இப்போது தெரிந்து விட்டது இந்த முறை வெற்றி பெறுவது கடினம் தான் என்று. பிரதமர் மோடியின் அடிமை எடப்பாடி பழனிசாமி தான் என்பதால் அவர்தான் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் அழைக்கவில்லை என்று ஓ.பி.எஸ்.,மற்றும் டி.டி.வி.க்கு கோபம்.
மிகப்பெரிய அடிமை நான் என்னை கூப்பிடவில்லை என்று டி.டி.வி.க்கு கோபம். உண்மையான அடிமை நான் என்னை கூப்பிடவில்லை என்று ஓபிஎஸ்-க்கு கோபம். யார் அடிமை என்பதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். மத்தியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை விட யார் ஆட்சி செய்யக்கூடாது என்பது தான் முக்கியம். பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முதல் நோக்கம். இவ்வாறு, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…