Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!

Baskaran. S Updated:
ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!Representative Image.

சென்னை: ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உயர்கல்வி துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கூட்டம் இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பாக உயர்கல்வி வட்டாரங்கள் கூறும்போது, அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் எம் ஐ டி கல்லூரியில் முதல்வராக இருப்பவர். ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவரை, பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டுமென,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜிடம் கேள்வி எழுப்பினார். அதனை சுட்டிக்காட்டி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோரை குழு அமைத்து, அதன் மூலமே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் போதிய நிதி இல்லை என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு போதுமான நிதி வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் வேல்ராஜ். பல்கலைக்கழகங்களிடமிருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு எடுத்துக் கொண்டது போலவே, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல் அவர் பேசினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொள்ளட்டும். அதேபோல் எம்ஐடி மற்றும் ஏ சி டெக் கல்லூரிகளையும் அரசே எடுத்துக் கொள்கிறோம்.

வருமானம் வரும் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகமே வைத்துக் கொள்ள வேண்டும்; வருமானம் இல்லாதவற்றை அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமா என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியாக தெரிவித்த உயர் கல்வித் துறை வட்டாரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்றும், விரைந்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவித்தன.

மேலும், ஆளுநர் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்க வேண்டும் என்ற அவசியம் துணைவந்தர்களுக்கு இல்லை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் தேதி மட்டும் தான் கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்களே முடிவு செய்யலாம் என , துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாகவும், அதேபோன்று,  யுஜிசி செல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற தேவை இல்லை் மாநிலத்தில் என்ன சூழ்நிலை நிலவுகிறதோ அதற்கு ஏற்றார் போல தான் செயல்பட முடியும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாகவும்,தகவல்கள் வெளியாகி உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்