Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,981.28
-5.75sensex(-0.01%)
நிஃப்டி22,180.75
-19.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!

Baskaran Updated:
அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!Representative Image.

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் ஏன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர் என்ற காரணம் தெரியவந்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி விகிப்பவர் பொன்முடி. இவருக்கு சொந்தமான வீடு, அலுவலம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சரின் மகன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் 5அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்கா துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனைக்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர்  வட்டம், பூத்துறை கிராமத்தில்  2006 - 2011 வரையிலான காலத்தில் செம்மண் குவாரியில்அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடியளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் து றை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கௌதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன்  ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி எம்.பி.பொன்.கெளதமசிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றமும், அதிகாரத்தை பயன்படுத்தி மாமியார் பெயரில் சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை அண்மையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்