ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு சிக்கல்... மத்திய அரசிடம் இருந்து பறந்த கடிதம்!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் யாத்திரையை தள்ளி வையுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளார். 

குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கினார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு நடைபெறவுள்ள இந்த நடைபயணம் 100 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார். அதில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கொரோனா விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும், மாஸ்க், சுத்திகரிப்பான் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மட்டுமே நடைபயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றால், பொதுசுகாதார நிலையைக் கருத்தில் கொண்டும், இந்தியாவின் பாதுகாப்பை எண்ணியும் இந்தியாவிற்கான ஒற்றுமை பயணத்தை ஒத்திவைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

Show comments

தொடர்பான செய்திகள்

ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!.

மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார்..! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!.

அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை .