Gucci’s Cruise 2024: நேரம், தேதி, கலந்து கொள்ளும் விருந்தினர் பட்டியல் இங்கே..! பிரபல இந்திய நடிகையும் பங்கேற்பு..!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், Gucci Cruise நிகழ்ச்சியை 2024 ஆம் ஆண்டு நடத்தப்போவதாக அறிவித்தது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பேஷன் நிகழ்ச்சி மே 16 ஆம் நாள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம், நாள், விருந்தினர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சியின் முழுவிவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

Gucci Cruise நடைபெறும் தேதி, நேரம், மற்றும் இடம்

குஸ்ஸி குரூஸ் 2024 நிகழ்ச்சியானது, தென்கொரியாவின் சியோலில் உள்ள கியோங்போகுங் அரண்மனையில் நடைபெறும். இந்நிகழ்ச்சியானது இரவு 8 மணி KST-யில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. முன்னரே, இந்த நிகழ்ச்சி நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அக்டோபர் 29 ஆம் நாள் Itaewon-ல் நடந்த சோகத்தால், இந்த பிராண்ட் ஆனது அதன் ஃபேஷன் ஷோவை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது.

சியோலில் ஃபேஷன் ஷோ நடைபெறக் காரணம்

இந்த குஸ்ஸியின் குரூஸ் 2023 நிகழ்ச்சியானது சியோலில் உள்ள கியோங்போகுங் அரண்மனையில் அரங்கேறத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெறுவதற்குக் காரணம், இந்த பிராண்ட் ஆனது அந்நாட்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும், இந்த இடம் தென் கொரிய கலாச்சார பாரம்பரியத்தின் அழகை எடுத்துரைப்பதற்காகவும் ஆகும். இந்நிகழ்ச்சியானது கியோங்போகுங் அரண்மனையின் பிரதான மண்டபமாக விளங்கும் கியூன்ஜியோங்ஜியோனுக்கு முன்னால் நடைபெறும்.

விருந்தினர்களின் பட்டியல்

குஸ்ஸியின் முதல் இந்திய உலகளாவிய அம்பாசடர் ஆக ஆலியா பாட் கலந்து கொண்டுள்ளார்.

இவருடன் ஹாரி ஸ்டைல்ஸ், டகோட்டா ஜான்சன் போன்ற பிற பிராண்ட் அம்பாசடர்களும் கலந்து கொண்டனர். நியூஜீன்ஸ் ஹன்னி, ஷின் மின்-ஆ, மற்றும் IU போன்றோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விருந்தினர் பட்டியலில், லீ ஜங் ஜே, கோ சோ யங், கிம் ஹீ ஏ, லிம் ஜி யோன், கிம் ஹை சூ, லீ யோன் ஹீ, ஷின் ஹியூன் பின், லீசியோ, பிஐபிஐ, கி யூன் சே போன்ற 50-க்கும் அதிகமான கொரிய பிரபலங்களும் உள்ளனர்.

Show comments

தொடர்பான செய்திகள்

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு .

டிவிட்டர் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு: எலான் மஸ்க் அதிரடி.

பிரான்ஸில் 17வயது சிறுவன் சுட்டுக்கொலை: வன்முறைக்கு அதிபர் கண்டனம்...!.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் - ரஷ்யாவை தீர்த்துகட்ட அமெரிக்கா உதவி | Russia Ukraine War.