இன்ஸ்டா ரீல்ஸில் வைரலாகும் தெம்மா தெம்மா பாடல்.. இந்த பாட்டு எந்த படத்துல வருது?

2004ல் வெளியான ‘ரெயின் ரெயின் கம் அகெயின்’ எனும் மலையாள படத்தில் வரும் ‘தெம்மா தெம்மா’ பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக, ஒரு புதியதாக வந்த பாடலுக்கு நம்ம ரீல்ஸ் பிரியர்கள் நடனமாடுவதும், அது வைரலாவதும் சாதாரண விஷயம் தான். ஆனால், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படத்திலிருந்து ஒரு பாடலை நம்ம ரீல்ஸ் பிரியர்கள் வைரலாக்கியுள்ளனர். 

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் ஒருமுறையாவது இந்த ரீல்ஸை பார்த்திருப்பீர்கள். அதில், கேரளாவில் உள்ள ஹாஸ்டல் கேர்ள்ஸ் சிலர் சேர்ந்து நடனமாடி இருப்பார்கள். இந்த நடனம் தற்போது பெரிதும் பேசும்பொருளாகவும் மாறிவருகிறது. இதற்கு பலரும் இப்படியலாமா ஆடுவாங்க என்றும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள். 

அதுமட்டுமல்லாமல், இதனை இளைஞர்கள் ட்ரோல் செய்தும் மீம் போட்டும் வெளியான வீடியோ இன்னும் அதிகமாக வைரலாகி விட்டது. நம்ம தளபதி நடித்த மாஸ்டர் படத்தில் ரிங்டோனாக வைத்த பாடல் எப்படி வைரலானதோ அதேபோல், தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது. 

Show comments

தொடர்பான செய்திகள்

உன்ன மாரி ஆளுங்க அரசியலுக்கு வரனும் சூர்யா..! - மதுரையில் போஸ்டர் ஒட்டிய அழைப்பு விடுத்த ரசிகர்கள்!.

அவ்வளவு தான் சார் வாழ்க்கை.. திருமண விழாவில் நடந்த சோகம்.. .

6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை... கலெக்டர் உத்தரவு.. .

25 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை.. ஹைதராபாத்தில் பரபரப்பு...