Nandhinipriya Ganeshan November 25, 2022
2004ல் வெளியான ‘ரெயின் ரெயின் கம் அகெயின்’ எனும் மலையாள படத்தில் வரும் ‘தெம்மா தெம்மா’ பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக, ஒரு புதியதாக வந்த பாடலுக்கு நம்ம ரீல்ஸ் பிரியர்கள் நடனமாடுவதும், அது வைரலாவதும் சாதாரண விஷயம் தான். ஆனால், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படத்திலிருந்து ஒரு பாடலை நம்ம ரீல்ஸ் பிரியர்கள் வைரலாக்கியுள்ளனர். இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் ஒருமுறையாவது இந்த ரீல்ஸை பார்த்திருப்பீர்கள். அதில், கேரளாவில் உள்ள ஹாஸ்டல் கேர்ள்ஸ் சிலர் சேர்ந்து நடனமாடி இருப்பார்கள். இந்த நடனம் தற்போது பெரிதும் பேசும்பொருளாகவும் மாறிவருகிறது. இதற்கு பலரும் இப்படியலாமா ஆடுவாங்க என்றும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இதனை இளைஞர்கள் ட்ரோல் செய்தும் மீம் போட்டும் வெளியான வீடியோ இன்னும் அதிகமாக வைரலாகி விட்டது. நம்ம தளபதி நடித்த மாஸ்டர் படத்தில் ரிங்டோனாக வைத்த பாடல் எப்படி வைரலானதோ அதேபோல், தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது.
Nandhinipriya Ganeshan November 25, 2022
கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ். 23 வயதான இந்த இளம்பெண் தனது உறவினர் வீட்டிற்கு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இந்தநிலையில், அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழு, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார் என்றும் மருத்துவர்கள் கூறினர். சமீப காலமாக இதுபோன்ற இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து இறக்கும் சம்பவங்கள் இளைஞர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nandhinipriya Ganeshan November 23, 2022
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீப திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி, இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்ற விழா வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிசாலையில் உள்ள கடை, நல்லவன்பாளையம் ஹோட்டல்கள், வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Nandhinipriya Ganeshan November 18, 2022
ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி ஜூனியர் என்ற அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்கல்லூரி ஆய்வகத்தில் எதிர்பாராத விதமாக ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால், 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே, பாதிக்கப்பட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த ராசயன வாயு கசிவு குறித்து உள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Gowthami Subramani November 08, 2022
நவம்பர் 8 ஆம் நாளான இன்று சந்திர கிரகணம் நிகழவிருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், கோவில்கள் நடை மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்பே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை சோழப்பேட்டை கிராமத்தில் மிக நீளமான வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து வந்த காட்சி அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வியப்பில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, வேப்ப மரத்தை கடவுளாக நினைத்த பொதுமக்கள், மஞ்சள், குங்குமம் பூசி வேப்ப மரத்தை வழிபாடு செய்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Priyanka Hochumin November 08, 2022
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டி பகுதியில் அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அதிகப்படியான குடியிருப்பு, அரசு பள்ளி, வார சந்தை அம்மா பூங்கா போன்றவை செயல்பட்டு வருகிறது. அந்த மது கடையில் இருக்கும் போதை ஆசாமிகளால் பெண்கள், மாணவிகள் என்று அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து தயவு செய்து கடையை மூடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
Gowthami Subramani November 07, 2022
இந்தூரில், நான்கு சிறுமிகள் குடிபோதையில் மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள எல்ஐசி திராஹாவில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், நான்கு சிறுமிகள் தகராறு செய்வதுடன், ஒரு பெண்ணை சரமாரியாக அடித்தவாறு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நான்கு சிறுமிகளும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் சாலையில் இருந்த சிறுமியின் மொபைலை அடித்து நொறுக்கியுள்ளனர்.
பூமியை நோக்கி வரும் நூறு அடி விட்டம் கொண்ட பெரிய விண்கல் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். யூ.என்.5 எனப் பெயரிடப்பட்ட அந்த விண்கல், மணிக்கு 29,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். எனினும் இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு பூமியின் புவி வட்டப் பாதையை 8 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றுவிட்டது. விண்வெளியில் சுற்றித் திரியும் விண்கற்கள் பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுப்பதற்காக அந்த விண்கற்கள் மீது விண்வெளியிலேயே மோதி திசைத் திருப்பும் முயற்சியில் சமீபத்தில் நாசா சமீபத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Gowthami Subramani November 04, 2022
தமிழக அரசு பால் விலையை உயர்த்தி நிர்ணயித்துள்ளது இல்லத்தரசிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமாக இருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை, குறிப்பிடப்பட்ட நியாயமான உறையில் விற்பனை செய்வது ஆகும். இந்த சூநிலையில், உற்பத்தி செலவினம் மற்றும் இடுபொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை வாட்டி வரும் நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு நாளை, நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.