Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிராக்டர் வாங்க நிதியுதவி வழங்கும் இந்தியன் வங்கி.. | Indian Bank Tractor Loan

Nandhinipriya Ganeshan Updated:
டிராக்டர் வாங்க நிதியுதவி வழங்கும் இந்தியன் வங்கி.. | Indian Bank Tractor LoanRepresentative Image.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அதன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், நாட்டின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாஃபே மற்றும் டிஎம்டிஎல் (TAFE & TMTL) உடன் இணைந்து டிராக்டர்களை குறைந்த வட்டியில் வாங்குவதற்கு லோன் வழங்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியன் வங்கியின் செயலாக்க இயக்குநர் திரு. இம்ரான் அமீன் சித்திக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் கையெழுத்து விழாவில், இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கிச்சேவைக்கான பொது மேலாளர் திரு.மணி சுப்ரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறையின் பொது மேலாளர் திரு. நரேந்திர குமார் சர்மா மற்றும் CMS துறைத் தலைவர் திரு. சௌரப் டால்மியா உட்பட, இவ்வங்கியின் மூத்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

டிஎம்டிஎல் நிறுவனத்தின் கீழ் ஐஷர் (Eicher) டிராக்டர்களும்; டாஃபே நிறுவனத்தின் கீழ் மஸ்ஸி பெர்குஷன் டிராக்டர் (Massey Ferguson Tractor - MF), டாஃபே டிராக்டர் (Tafe Tractor), IMT டிராக்டர் போன்ற டிராக்டர்களும் நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவே, விவசாயிகள் மற்றும் பிற தனிநபர்கள் சிரமமின்றி கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் ஆதாயத்தோடு சேர்த்து குறைந்த வட்டி விகிதங்களில் டிராக்டர்களை வாங்குவதற்கும் இந்த திட்டம் உதவும்.

டிராக்டர் வாங்க நிதியுதவி வழங்கும் இந்தியன் வங்கி.. | Indian Bank Tractor LoanRepresentative Image

டிராக்டர் வாங்க ஆர்வமுள்ளவர்கள், நாடு முழுவதும் 5700க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட இந்தியன் வங்கியின் எந்தக் கிளையையும் அணுகி இந்த நிதியுதவியைப் பெறலாம். இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கி/SLBC/RRB துறையின் பொது மேலாளர் திரு. வி.சந்திரசேகரன் பேசுகையில், 'நாட்டின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களான TAFFE மற்றும் TMDL உடனான இந்த ஒத்துழைப்பு, 

நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் சிரமமின்றியும் டிராக்டர்களை வாங்குவதற்கான கடன் வழங்க எங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், நாடு முழுவதும் 5700 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சிறந்த சேவை வழங்கல் அம்சங்களிலும் இந்தியன் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த 2023-24 நிதியாண்டில் டிராக்டர்கள் வாங்குவதற்கான நிதியுதவிக்கு ரூ.500 கோடி ஒப்புதல் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்று அவர் கூறினார்.

இந்தியன் வங்கியுடனான இந்த கூட்டு முயற்சி குறித்து Tafe மற்றும் TNDL தலைமை நிதி அதிகாரி திரு. பரமேஸ்வர ரெட்டி தேவி கூறியதாவது, 'இந்தியன் வங்கியுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையானது, Tafe மற்றும் DMDL இன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் வசதியான நிதியளிப்பு விருப்பங்களையும், கடன் திட்டங்களைப் பெறுவதற்கான விருப்பங்களை வழங்கும். மேலும் இது ஒரு டிராக்டரை சொந்தமாக வைத்திருக்கும் அவர்களின் கனவுகளை நனவாக்க, நிதியளிப்பு அனுபவத்தை எளிதாக்குவதோடு சிரமற்றதாகவும் மாற்றும்' என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்