Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!

Gowthami Subramani November 08, 2022 & 18:00 [IST]
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை வழிவகுத்து, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையில் பயன் தருகின்றன. அதன் படி, தமிழக அரசு தற்போது கூறியதாவது விவசாயிகள் 90% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை அமைத்துப் பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளது. அரசு வழங்கிய இந்த திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

சோலார் பம்புசெட் திட்டம்

மத்திய அரசுடன் இணைந்து, விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டமே, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் திட்டம் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிக அளவில் கிடைக்கக் கூடிய சூரிய சக்தியைப் பயன்படுத்தி, அதனை மின் சக்தியாக மாற்றி வேளாண் துறையில் பெருமளவில் பயன்படுத்திட வழிவகுத்ததே முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம் ஆகும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

கிணற்றுப் பாசனத்திற்கு

தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ், 10 குதிரைத் திறன் வரையிலான 5000 பம்புசெட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது. சோலார் பம்புசெட்டுகள் மூலமாக பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தைப் பெறலாம். இதன் மூலம், விவசாயிகள் எளிதில் கிணற்றுப் பாசனத்தை மேற்கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

மானிய விவரங்கள்

தமிழக அரசின் சோலார் பம்புகளுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், மின் கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் தனித்து இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ், ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியத்தில் கூடுதலாக அதாவது 70% மானியத்துடன் 20% மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

இலவச வசதிகள்

90% மானியத்துடன், கூடுதலாக இந்த வசதிகளும் சோலார் பம்புசெட் அமைப்பின் கீழ் கிடைக்கப்பெறும். அதன் படி, இந்தத் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் தனித்து இயங்கக் கூடிய AC மற்றும் DC பம்பு செட்டுகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவசமாக பராமரிப்பு செய்து தரப்படும். அது மட்டுமல்லாமல், இவற்றிற்கு காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

மானியம் பெறுவதற்கான தகுதி

தமிழக அரசு திட்டத்தின் கீழ் மானியம் பெறும் நபர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

✤ இத்திட்டத்தில், ஏற்கனவே கிணறு அமைத்து மின் இணைப்பு இல்லாமல் டீசல் என்ஜினின் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெறலாம்.

 ✤ இத்திட்டத்தின் கீழ், புதிதாக கிணறு அமைக்கும் போது, அதில் வரையறுத்துள்ள நிலநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் மட்டும், பயன்பெற அனுமதிக்கப்படுவார்கள்.

✤ மேலும் சோலார் பம்பு செட்டை நிறுவிய பிறகு, நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைந்து பாசனம் மேற்கொள்வதற்கு விவசாயிகள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

✤ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இலவச மின் இணைப்புக்கோரி விண்ணப்பித்திருந்தால், இலவச மின் இணைப்பு பெறும் போது சோலார் பம்பு செட்டை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

விண்ணப்பிக்கும் முறை

✤ இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி அல்லது இணையதளத்தின் (https://www.tnagrisnet.tn.gov.in/people_app/) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

✤ அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்டௌதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி இந்த திட்டத்திற்கு நேரிலும் விண்ணப்பிக்கலாம்.

✤ விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://pmkusum.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

✥ ஆதார் அட்டை நகல்

✥ புகைப்படம்

✥ சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்

ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருப்பின் அவற்றிற்கான சாதிச் சான்றிதழ்

✥ சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் நகல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்