Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Banana Flower Cutlet Recipe in Tamil: வித்தியாசமான சுவையில் மொறுமொறு வாழைப்பூ கட்லெட்… இப்படி செஞ்சி அசத்துங்க…

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 12:45 [IST]
Banana Flower Cutlet Recipe in Tamil: வித்தியாசமான சுவையில் மொறுமொறு வாழைப்பூ கட்லெட்… இப்படி செஞ்சி அசத்துங்க…Representative Image.

Banana Flower Cutlet Recipe in Tamil: நம்மில் பலருக்கும் கட்லெட் என்றால் மிகவும் பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ். பொதுவாக நாம் வெஜிடபிள் கட்லெட், முட்டை கட்லெட் சாப்பிட்டு இருப்போம். ஆனால் வித்தியாசமான சுவையில் வாழைப்பூவை கொண்டு கட்லெட் செய்யலாம் உங்களுக்கு தெரியுமா? கட்லெட்டே வித்தியாசமான ஒரு ஸ்நாக்ஸ் தான், அதில் மேலும் வித்தியாசமாக சேர்த்தால் நன்றாக தானே இருக்கும். 

வாழைப்பூ கட்லெட் செய்வதற்கு ரொம்ப நேரம் அடுப்படியில் இருக்க வேண்டியது இல்லை. சட்டென்று செய்துவிடலாம். வாங்க வாழைப்பூ கட்லெட் (valaipoo cutlet) எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - ஒரு கப் பொடியாக நறுக்கியது

வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

உருளைக்கிழங்கு - 2-3

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 6 பொடியாக நறுக்கியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

பிரட் தூள் - 1/4 கப் அளவு

முட்டை வெள்ளைக்கரு - 1-2

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு 

கறிவேப்பிலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி இலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

❖ முதலில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீரில் 15 நிமிடம் ஊறவைத்துவிடுங்கள். 

❖ பின்னர், வாழைப்பூவில் இருக்கும் தண்ணீரை நன்றாக பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் தனியாக போட்டு கொள்ளுங்கள். 

❖ உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து கொள்ளுங்கள்.

❖ இப்போது ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேறியதும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

❖ பொன்னிறமாக வதங்கியதும், அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தனியாக எடுத்து வைத்திருந்த வாழைப்பூவை சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வையுங்கள்.

முட்டை கட்லெட் செய்வது எப்படி?

❖ இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, மசித்து வைத்திருந்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, இறக்கி ஆற வையுங்கள்.

❖ இப்போது மசாலாவில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு பகுதியை எடுத்து நன்றாக தட்டவும். மசாலா கையில் ஒட்டினால், உங்கள் உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளலாம். 

❖ எல்லா மசாலாவையும் கட்லட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

❖ மற்றொரு தட்டில் பிரட் தூளை எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது தட்டி வைத்த கட்லெட் உருண்டைகளை ஒவ்வொன்றாக முதலில் முட்டையில் தோய்த்து, பின்னர் பிரட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

❖ பிரட்டி எடுத்த கட்லெட் உருண்டைகளை 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். இப்போது ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.

❖ எண்ணெய் போதுமான அளவு சூடானதும், கட்லெட் உருண்டைகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக மாறும் வரை எல்லா பக்கமும் அதை திருப்பி திருப்பி விடுங்க.

❖ பொன்னிறமாக மாறியதும், எண்ணெயிலிருந்து வடிகட்டி எடுத்தால், சூடான, சுவையான, மொறுமொறு வாழைப்பூ கட்லெட் ரெடி...!!

❖ இதை வீட்டில் தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் இருந்தால் அதில் தொட்டு சாப்பிட்டு பாருங்க, சுவை இன்னும் தூக்களாக இருக்கும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

Banana Flower Cutlet Recipe in Tamil | How to make banana flower cutlet in tamil | Valaipoo cutlet | Vazhapoo Cutlet | Vazhachundu cutlet | Cutlet recipes in tamil | Veg cutlet | Egg cutlet recipe in tamil 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்