Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water Faster

Nandhinipriya Ganeshan Updated:
வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water FasterRepresentative Image.

நாம் வீட்டில் வளர்ப்பதற்காகவே பல விதமான செடிகள் இருக்கின்றன. அவற்றில் அதிர்ஷ்ட செடியாக இருப்பது மணி பிளாண்ட். இந்த செடியை பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பதை பார்த்திருப்போம். ஏனென்றால், இந்த செடி வளரும் வீட்டில் அதிர்ஷ்டம் தேடி வருமாம். பொதுவாக, இந்த செடியை மண்ணில் தான் வளர்ப்பார்கள். ஆனால், இதை வெறும் தண்ணீரிலும் வளர்க்கலாம். என்னாங்க சொல்றீங்க தண்ணீரிலா? ஆம், இந்த செடி தண்ணீரிலும் வளரக்கூடியது. சரி வாங்க, தண்ணீரில் வளர்ப்பது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 

வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water FasterRepresentative Image

தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்க்கும் முறை:

வீட்டிற்குள் இந்த செடியை வளர்க்க சின்ன துண்டு மணி பிளாண்ட் இருந்தாலே போதும். அதற்கு வேர் வேண்டுமென்று அவசியம் இல்லை. முதலில் ஒரு கொடியில் ஒரு இலையுடன் இருக்குமாறு 6 லிருந்து 7 தண்டு நறுக்கிக் கொள்ளுங்கள்.

பின்னர், அவற்றை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு கயிறு கொண்டு கட்டிக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு கப் அல்லது ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி நாம் கட்டி வைத்துள்ள செடியை அதில் வைத்துவிடுங்கள். 

அவ்வளவு தான். ஏழு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை மாற்றிவிட வேண்டும். இவ்வாறு ஒரு மாதத்திற்கு தண்ணீரை மட்டும் மாற்றிக்கொண்டே இருங்கள். 30 நாள் கழித்து செடியில் வேர் வந்துவிடும். 

வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water FasterRepresentative Image

இதை அதே பாட்டில் அல்லது வேறொரு அழகிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், Gravel Stones என்ற கற்கள் கடையில் கிடைக்கு அதை வாங்கி, எடுத்து வைத்துள்ள பாட்டிலில் பாதியளவு நிரப்பி, 3/4 அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். 

இப்போது அந்த வேருடன் இருக்கும் மணி பிளாண்ட்டை எடுத்து அதில் வைத்து உங்களுக்கு பிடித்த இடத்தில் தென்கிழக்கு திசையை பார்த்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அவ்வப்போது தண்ணீர் மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்