Nandhinipriya Ganeshan May 23, 2023
கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த நேரத்தில் உடல் நிறைய ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதனால், உடலில் எடை அதிகரிப்பது, மார்பக பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுவது, முடி மற்றும் தோல் பளபளப்பாக மாறுவது போன்றவை நிகழ்கின்றன. இருப்பினும், இவற்றை தாண்டி இன்னும் பல மாற்றங்கள் உள்ளன. அதாவது, உங்கள் யோனி (பிறப்புறுப்பு) பகுதியிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த யோனி மாற்றங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் அவ்வளவாக தெரியாது. ஆனால், கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் கவனிக்கலாம். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் யோனியின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் பொதுவான ஒரு விஷயம். சரி வாங்க கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில யோனி மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். யோனி வீங்குதல்: கர்ப்ப காலத்தில் யோனி பகுதியில் வீங்கி வலிக்கிற நரம்புகள் வெளியில் தெரியும். சுமார் 10 சதவீத பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாக இருப்பது தான். எனவே, கர்ப்பிணிப் பெண் நீண்ட நேரம் உட்காருவதையோ நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், அதிகளவு தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும். pH அளவில் மாற்றம்: கர்ப்ப காலத்தில் உடலின் பாகங்களுக்கு அதிகளவு இரத்த ஓட்டம் இருக்கும். இதில் கருப்பை மற்றும் பிறப்புறுப்பும் அடங்கும். அதிகளவு இரத்த ஓட்டம் கருப்பை மற்றும் யோனி பகுதியில் உள்ள இரசாயனங்களின் pH சமநிலையை மாற்றுகிறது. இதனால், கர்ப்பிணியின் யோனியில் ஒருவிதமான மாவு வாசனை ஏற்படும். இருப்பினும், அதற்கு மாறாக துர்நாற்றம் வீசினால், அது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும். மேலும், பிறப்புறுப்பு பகுதியில் உள்ள இரசாயனங்களின் pH சமநிலையில் மாற்றம் ஏற்படும் போது, யோனியில் சுவை மாற்றமும் ஏற்படுகிறது. அதாவது, யோனி பகுதியில் உலோகம் மற்றும் உப்பு கரிப்பது போன்ற சுவை இருக்கும். நிறமாற்றம்: பொதுவாக, யோனியின் நிறம் இளஞ்சிவப்பாக இருக்கும். ஆனால், ஹார்மோன் மாற்றங்களுடன் இரத்த ஓட்டமும் அதிகரிப்பதால் யோனியின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது. பிரசவத்தை எதிர்கொள்ளும் தாயிக்கு நிறமி (பிக்மென்டேஷன்) என்பது பொதுவானது தான். இது லேபியா மற்றும் வுல்வாவை பாதிக்கிறது. அந்த சமயத்தில் யோனியின் நிறம் ஊதா அல்லது நீல நிறமாக மாறுகிறது. இருப்பினும், இந்த நிற மாற்றங்கள் பிரசவத்திற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே ஏற்படத் தொடங்குகின்றன. வெள்ளைப்படுதல்: பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமே வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. கர்ப்பக் காலத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால், லேபியாவில் (Labia) மாற்றங்களை ஏற்படுத்தும். இது லுகோரியா எனப்படும் பால் போன்ற திரவத்தை உருவாக்க யோனி சுவர்கள் தூண்டப்படும். இது தான் யோனி பகுதியில் எந்த தொற்றுநோய்களும் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. எனவே, வெள்ளைப்படுதல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தால் பயப்பட வேண்டாம். அதிகமான முடி வளர்ச்சி: அதிகப்படியாக வெள்ளைப்படுதல், pH அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற மாற்றங்கள் உங்களுடைய யோனி பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அரிப்பும் ஏற்படும். அரிப்பு என்பது கர்ப்பத்தின் பொதுவான அறிகுறியே. ஆனால் இந்த அரிப்பு தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும். மேலும், இரத்த ஓட்டத்தில் ஈஸ்ட்ரோஜனின் அதிக அளவு அந்தரங்க முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கூடியவை. இதனால் தான், மாதம் ஒருமுறை மருத்துவரை அணுகும்போது முடியை நீக்கி விடுகிறார். பெண்ணின் பிறப்புறுப்பு: ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில், யோனி பகுதியில் ஏற்படும் சில மாற்றங்கள் விசித்திரமாகக்கூட தோன்றலாம். ஆனால் அவை முற்றிலும் இயல்பானவையே. இந்த மாற்றங்கள் எதுவும் நீண்ட காலம் நீடிக்காது, அத்தோடு அவை உங்க கர்ப்பத்தை எந்த வகையிலும் பாதிக்காது. மேலும், உங்க பிரசவம் முடிந்த பிறகு (குழந்தை பிறந்த பிறகு) உடல் பாகங்கள் அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவிடும். இருப்பினும், இந்த மாற்றங்கள் உங்க அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டால், அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.
Nandhinipriya Ganeshan March 27, 2023
ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும் என்றாலும் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை கவனிக்க தவறிவிடுகிறார்கள். இதற்கு காரணம் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டால் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியாததே. சரி, வாங்க நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan March 25, 2023
"டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம்" (Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் இரண்டு பிரசவங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ. 18000 நிதி உதவி (Pregnanct Scheme in Tamil) வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது, இத்திட்டத்தினால் என்னென்ன பயன்கள் போன்றவற்றை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan February 22, 2023
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு வரவேற்கிறோம். பொதுவாக, கர்ப்பத்தின் ஐந்தாவது மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நல்ல மாதமாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல், மனதில் ஒரு நிம்மதியும் குடிக்கொள்ளும். இந்த மாதத்தில் தான் தாய் தனது குழந்தையின் அசைவுகளை உணர்வுத் தொடங்குகிறாள். குழந்தையின் வளர்ச்சியும் இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்கும். சரி வாங்க, ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani February 14, 2023
பொதுவாக, கருத்தரிப்பு காலங்களில் பெண்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. கருத்தரிப்பு காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு எதாவது ஆபத்து நேரிடுமோ என்ற கேள்வியும் எழும். இது குறித்த விரிவான தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.
Nandhinipriya Ganeshan January 27, 2023
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது.
Nandhinipriya Ganeshan December 26, 2022
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும்.
Nandhinipriya Ganeshan December 19, 2022
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. சரி, உங்க இளவரசனோ இளவரசியோ 5வது மாதத்தில் எவ்வளவு எடை இருப்பார்கள், அவர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
Nandhinipriya Ganeshan December 05, 2022
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கும். இதனால், பல வகை உணவுகளை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், கர்ப்பத்தின் போது எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு சில உணவுகளை தவிர்ப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், கர்ப்பத்தின் 5வது மாதத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில உணவுப்பொருட்களை பற்றி தெரிந்துக்கொள்வோம். இவ்வகை உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் நன்மை பயக்கும்.
Nandhinipriya Ganeshan November 28, 2022
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கிறது. இதனால், உங்களுக்கு பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட், ஊறுகாய் போன்றவற்றை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், உங்க குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துநிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கர்ப்பத்தின் 5வது மாதத்தில் நீங்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.