Sun ,Apr 21, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57

குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு இயற்கை முறையில் கண் மை தயாரிப்பது எப்படி? | Organic Kajal for Newborn Baby

Nandhinipriya Ganeshan July 26, 2023

அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அழகு சேர்ப்பதே இந்த கண் மை தான். எவருடைய கண்ணும்படக் கூடாது என்பதற்காக பிறந்த குழந்தைகளுக்கு கண்களிலும், கன்னத்திலும் கண் மை (காஜல்) வைப்பார்கள். நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் என்று நமக்கும் தெரியுமல்லவா! ஆம், கண்களில் கண் மை வைப்பது அழகு சேர்ப்பதற்காக மட்டுமல்ல. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் தான். அதாவது, கண் மை கண்களுக்கு குளுமையை தரக்கூடியது. அதனால் தான் தினமும் கண் மை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கண் மையை எத்தனையோ அழகு சாதன நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ஆனால், அவற்றில் கரி, ஈயம், செயற்கை நிறம் அல்லது சில்வர் நைட்ரேட் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். அதை தொடர்ந்து பயன்படுத்துவரும்போது கண்களில் வேறு சில பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். நினைத்து பாருங்கள்! குழந்தைகளுக்கு அம்மாதிரியான மைகளை பயன்படுத்தும்போது எப்படி இருக்கும் என்று. எனவே, அவற்றை தவிர்த்துவிட்டு 100% இயற்கையான கண் மையை நாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது உங்கள் கண்களின் அழகை மேம்படுத்துவதோடு, கண்களை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். சரி வாங்க, கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் கண் மை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சந்தன பொடி - 2 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன் பாதாம் பருப்பு - 1 களிமண் விளக்கு - 1 காட்டன் துணி வீட்டில் காஜல் தயாரிக்கும் முறை: முதலில் சந்தனப் பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலக்கிக்கொள்ளுங்கள். அதில் காட்டன் துணி போட்டி நன்றாக நனைத்து வெயிலில் சிறிது நேரம் காயவிடவும். இப்போது, உலர்ந்த துணியை விளக்கு திரி போன்று உருட்டிக்கொள்ளுங்கள். தயார் செய்த திரியை களிமண் விளக்கில் வைத்து அதோடு நெய் சேர்த்து விளக்கை (பூஜை அறையில் வழக்கம்போல் தீபம் ஏற்றுவது போல) ஏற்றவும். பின்னர் விளக்கை ஒரு தட்டில் வைத்து அதை சுற்றிலும் நான்கு சில்வர் அல்லது கண்ணாடி டம்ளர்களை வைத்து, அதன்பீது சில்வர் தட்டு ஒன்று கவுத்துவிடவும். அதற்கு முன்பு சில்வர் தட்டு முழுவதும் விளக்கெண்ணெய்யை தடவிக் கொள்ளுங்கள். விளக்கு முழுவதும் எறிந்தவுடன் அந்த தட்டை எடுத்துப்பார்த்தால், கரி படிந்திருக்கும். அதை ஒரு கத்தியை கொண்டோ அல்லது ஸ்பூனை பயன்படுத்தியோ சுரண்டி ஒரு சிறிய பாத்திரத்தில் சேமித்து கொள்ளுங்கள். இப்போது, நாம் எடுத்துவைத்துள்ள இரண்டு பாதாம் பருப்பை அடுப்பில் காட்டி தீய வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கரண்டியை கொண்டு நசுக்கினால், பவுடர் போல நொறுங்கும். அந்த பவுடரை நாம் தயாரித்து வைத்து கரியில் சேர்த்து 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளவும். உங்களுக்கு எந்த பதத்திற்கு வேண்டுமோ அந்தளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் கருமையான இயற்கையான கண் மை தயார். இதை ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கன்டெய்னரில் சேகரித்து தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி? | How to Make Horlicks at Home for Babies

Nandhinipriya Ganeshan July 25, 2023

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகளை கொடுக்க தொடங்கலாம். குறிப்பாக, சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம். அதனால், பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கென்று விற்பனை செய்யப்படும் ஹார்லிக்ஸ் பவுடரை வாங்கி பாலில் கலந்துக் கொடுப்பார்கள். இருப்பினும், அவை எவ்வளவு ஆரோக்கியத்தை தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதனால், வீட்டிலேயே ஹார்லிக்ஸ் தயார் செய்து கொடுக்கலாம். குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.  தேவையான பொருட்கள்: ➦ பாதாம் - 1 கப் ➦ முந்திரி - 1 கப் ➦ பிஸ்தா - 1 கப் ➦ பால் பவுடர் - 1 கப் ➦ முளைக்கட்டிய முழு கோதுமை - 2 கப் செய்முறை: ➦ முதலில் கோதுமையை எடுத்து நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர், அதை மீண்டும் தண்ணீய்ர் சேர்த்து 6-7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ➦ 7 மணிநேரம் கழித்து தண்ணீரை வடிகட்டிவிட்டு, வெள்ளை துணியில் கோதுமையை போட்டு கட்டி, சமையல் அறையில் உள்ள ஜன்னல் அல்லது எதிலாவது தொங்கவிடவும்.  ➦ காலையும் மாலையும் கோதுமை இருக்கும் துணியின் மேல், லேசாக தண்ணீரால் அப்படியே தெளித்து விடவும். இரண்டு நாள் வரை இப்படி செய்யலாம். 3-4 நாளில் கோதுமை முளைவிட்டிருக்கும்.  ➦ 4வது நாளில் அன்று காலை தண்ணீர் தெளிக்காமல், கோதுமையை துணியிலிருந்து எடுத்து, ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியில் முளைவிட்ட கோதுமையை போட்டு நன்றாக உலரவிடவும். ➦ இப்போது, பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் தனித்தனியாக வாணலில் கொட்டி 5-6 நிமிடங்கள் கை விடாமல் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மூன்றையும் வறுத்தபிறகு, ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.  ➦ நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். பின்னர், உலர்ந்த முளைக்கட்டிய கோதுமையை மிக்ஸி ஜாரில் போட்டு அதையும் பவுடராக அரைத்து கொள்ளவும். ➦ இப்போது அரைத்த இந்த பவுடரை ஒன்றாக கலந்து சல்லடையில் வைத்து சலித்து எடுக்கவும். பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் கொட்டி தினமும் சர்க்கரை சேர்க்காமல் குழந்தைகளுக்கு பாலில் கலந்துக் கொடுக்கவும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.. | Memory Power Increase Foods in Tamil

Nandhinipriya Ganeshan July 18, 2023

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை. அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். சரி வாங்க, குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். பால்: புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நல்ல பல் ஆரோக்கியம் இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதையும் தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். மீன்கள்: ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கியமான உணவுப் பொருளாக மீன் மற்றும் பிற கடல் உணவுகள் விளங்குகின்றன. காரணம், இவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முட்டை: முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் "செரடோனின்" என்ற மகிழ்ச்சி ஹார்மோனை உருவாக்கத்திற்கும் முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். நட்ஸ்: வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இவை மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5-6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுங்கள். குறிப்பு: பாதாம் பருப்பை ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டு கொடுக்கவும். ஆரஞ்சு பழம்: ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது ஆரோக்கியமான மூளைக்கு இன்றியமையாதது. ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, ஒருநாள் விட்டு ஒரு முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட குடுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டுமா..? அப்ப இத செய்யுங்க..! | How To Conceive Twins

Gowthami Subramani June 05, 2023

குழந்தை என்றாலே மிகுந்த ஆவல் தான். அதிலும் சிலர் இரட்டைக் குழந்தை மீது அதிக ஆர்வம் கொண்டு இருப்பர். அவ்வாறே சர்வதேச அளவில், இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இரட்டைக் குழந்தைகளை இயற்கையாகவே கருத்தரிப்பது எப்படி என தேடலும் நடந்து கொண்டு தான் வருகிறது. இதற்கு இயற்கையாக ஏதேனும் சாப்பிடலாமா.? அல்லது வேறு எந்த வழிகளில் இரட்டைக் குழந்தை பிறப்பை உருவாக்க முடியும் என்பது குறித்து இதில் காணலாம்.

ஒரே நேரத்தில் வேலையும் செய்து, குழந்தையைப் பாதுகாக்க முடியலயா..? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..! | Child Care Tips for Working Parents

Gowthami Subramani May 17, 2023

தங்கள் குழந்தைகளுக்குச் சரியான அனுபவங்களைக் கொடுப்பதும் முழு அக்கறையுடன் செயல்படுவதும் குழந்தைகளுக்கு நன்மையைத் தரும். மேலும், குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் வாயிலாக கிடைக்கும் அன்பு கிடைக்காத போது, அவர்கள் மன அழுத்தம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பதிவில் பணிபுரியும் பெற்றோருக்கு குழந்தை பராமரிப்பு ஒரு முக்கிய படியாக இருப்பதற்கான காரணங்களை இந்தப் பதிவில் காணலாம்.

குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கவைப்பது ?

Vaishnavi Subramani March 20, 2023

பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி

Vaishnavi Subramani March 14, 2023

இந்த காலகட்டத்தில் பல தாய்மார்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் ஆனாலும் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி நினைத்துக் கவலைப்படுவார்கள் அதற்கு இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். இந்த தாய்ப்பாலைச் சேகரிக்கும் முறையில் எவ்வளவு நாட்கள் வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முறை மூலம் வீட்டில் நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் குழந்தை உங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியும்.

பிறந்த குழந்தைய குளிப்பாட்டணுமா..? கண்டிப்பா இத பண்ணுங்க...

Gowthami Subramani February 27, 2023

வளர்ந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல, புதிதாக பிறந்த குழந்தைகளைக் கையாளக் கூடாது. எனவே, பிறந்த குழந்தைகளைக் குளிப்பாடும் போது மிகக் கவனமாகக் கையாள்வது அவசியம். நாம் பயன்படுத்தும் சாதாரண சோப்புகள், ஷாம்புகளைப் பயன்படுத்தக் கூடாது. பிறந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமான சோப்பு உள்ளது. இதில் பிறந்த குழந்தையை எப்படி குளிப்பாட்டலாம் என்பதைப் பற்றி இதில் காணலாம்.

7.3 கிலோ எடையில் பிறந்த குழந்தை.. இதுதான் காரணமாம்! - மருத்துவர்கள் விளக்கம்

Nandhinipriya Ganeshan February 08, 2023

பொதுவாக, குழந்தைகள் பிறக்கும்போது 3 கிலோ அல்லது அதற்கு குறைவாக தான் இருக்கும். ஒருசிலருக்கு மட்டுமே 4 கிலோவிற்கு மேல் பிறக்கும், இதுவே அதிக எடையில் இருப்பதாக தான் கூறுவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணி தாய்க்கு (42 வயது), 7.3 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மிகவும் எடை அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடந்தது. இது மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தாயும், சேயும் என நலம் என கூறப்படுகிறது. மேலும், இக்குழந்தைக்கு ‘ஆங்கர்சன் சாண்டோஸ்ய என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் தாய், கடுமையான நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்குப் பிறந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. மேலும், பிறக்கும் குழந்தை 4 கிலோவுக்கு மேல் எடை இருந்தால், மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படுவதுண்டு. இதற்கு காரணம் தாயின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகரிப்பால், சிசுவுக்குச் செல்லும் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் குழந்தை அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படும். தாயின் நீரிழிவு நோயே குழந்தையின் இப்பிரச்னைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர். இதேப்போல், கடந்த 1955 ஆம் ஆண்டு ஒரு பெண்ணிற்கு 10.2 கிலோ எடையில் குழந்தை பிறந்ததே அதிக எடையாகப் பார்க்கப்படுகிறது.

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth Weight

Gowthami Subramani February 08, 2023

பிறக்கும் குழந்தைகள், இந்த எடையுடன் தான் பிறக்க வேண்டும், இந்த அளவு உயரத்தில் தான் இருக்க வேண்டும் என உண்டு. ஆனால், குழந்தைக்கு எடை மற்றும் உயரம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிடப்பட்ட அளவை விட குறைவாக இருந்தாலும், அது ஆபத்தையே விளைவிக்கும். இது குறித்த முழு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.