ஹோலி தினத்தன்று நாம் அனைவரும் வண்ணங்கள் பூசுவது, பாங்கு குடிப்பது, இனிப்பு சாப்பிடுவது என்று கொண்டாட்டத்தில் தான் கவனமாக இருப்பீர்கள். ஆனால் நிறங்களை பூசி, நீரில் விளையாடுவதால் சருமத்திற்கு பல பிரச்சனைகள் வரும். அதைப் பற்றிய கவலை நமக்கு இல்லாமல் போய்விடும். எனவே, ஹோலி கொண்டாடுவதற்கு முன்னர் சருமத்தில் இருக்கும் நிறங்களால் எந்த பாதிப்பும் இன்றி எப்படி செயல்படுவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பாப்போம்.
முகத்தில் உள்ள வண்ணங்களை அகற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள நிறத்தை உருக்கி சோப்பு பயன்படுத்தும் பொழுது அதிகப்படியான அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.
உங்களுக்கு பிடித்த பிராண்டு எண்ணெயுடன் கோதுமை மாவை சேர்த்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி சில நிமிடங்கள் உலர விட்டு மசாஜ் செய்யவும். பிறகு, மென்மையான க்ளென்சர் மூலம் கழுவவும்.
முல்தானி மிட்டி ஒரு பெஸ்ட் ஆப்ஷன். இது நிறத்தை உலர்த்தவும், கழுவிய பின் அதை அகற்றவும் உதவும்.
தோலில் ஏற்படும் அரிப்புகளை நீக்க, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையைப் பயன்படுத்தலாம்.
ஹோலி கொண்டாடும் போது நகத்தில் வண்ணங்கள் படியலாம். எனவே, உங்கள் நகங்களை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.
ஹோலி கொண்டாடிய பின்னர் நிறங்களால் கை நகம் மஞ்சள் நிறமாகிவிடும். ஆகையால், எலும்மிச்சம்பழம் சாறில் 10 நிமிடம் ஊற வைத்தால் சரியாகிவிடும்.
ஹோலி கொண்டாடுவதற்கு முன்னர் dark nail polish கோட் செய்து விட்டு செல்லுங்கள். ஏனெனில் Dark nails நகங்களில் நிறத்தில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்காது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…