Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan October 20, 2022 & 12:03 [IST]
தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?Representative Image.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப்

பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

எள்ளு - 1 ஸ்பூன்

சீரகப் பொடி - 1/4 ஸ்பூன்

வெண்ணெய் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

ஓமம் - சிறிதளவு

செய்முறை:

➤ முதலில் பொட்டுக்கடலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அகலமான பாத்திரத்தின் மீது சல்லடையை வைத்து அரைத்த பொட்டு கடலை மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் சேர்த்து சலித்துக்கொள்ளவும்.

➤ சலித்த மாவோடு சீரகப் பொடி, பெருங்காயம், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கைகளால் நன்றாக கலந்துவிடுங்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, பிசுபிசுப்பு தன்மை வராத அளவிற்கு மாவை பிசைந்து கொள்ளவேண்டும்.

➤ பிசைந்த மாவை 5 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள். அப்போது மாவு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு கெட்டிப் பதத்துக்கு வந்திருந்தால், 1 டீஸ்பூன் தண்ணீர் விட்டு மறுபடியும் மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

➤ பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முறுக்கு அச்சில் மாவை போடுவதற்கு முன்பு உள்பக்கத்தில் எண்ணெயை லேசாக தடவிக்கொள்ளுங்கள். ஒரு பெரிய ஜல்லி கரண்டியை தட்டின் மீது கவிழ்த்து வைத்து அதன்மீதும் கொஞ்சம் எண்ணெய் தடவிட்டு, முறுக்கை பிழிந்து சுலபமாக எண்ணெய் சட்டியில் விடலாம்.

➤ அதேபோல், முறுக்கை எண்ணெயில் இருந்து எடுப்பதற்கும் தனியாக ஒரு கரண்டியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொண்டு இருபுறமும் வெந்தவுடன் எண்ணெயை நன்றாக வடிகட்டி உடனே எடுத்துவிடுங்கள்.

➤ அவ்வளவு தான் தீபாவளிக்கு ருசியான வெண்ணெய் முறுக்கு ரெடி. முறுக்கு நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டால் 5 நாட்களே ஆனாலும் நம்பத்து போகாமல் இருக்கும். 

குறிப்பு: வெண்ணெயை அளவோடு தான் சேர்க்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு உடைந்துவிடும். வெண்ணெய் இல்லையென்றால் டால்டாவை உருக்கு சேர்த்துக்கொள்ளலாம். முறுக்கு மிருதுவாகவும் இருக்கும்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளி பலகாரம்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

தீபாவளி பலகாரம்! இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்