Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,616.44
-327.24sensex(-0.45%)
நிஃப்டி22,022.45
-125.45sensex(-0.57%)
USD
81.57

அழகு குறிப்புகள்

சருமப் பொலிவை அதிகரிக்கும் ஹோம்மேட் ரோஸ் க்ரீம்.. தயார் செய்வது எப்படி? | Homemade Skin Whitening Rose Cream

Nandhinipriya Ganeshan July 24, 2023

சரும அழகை மேம்படுத்த பல கிரீம்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். இதனால், நன்றாக இருக்கும் சருமம் கூட மோசமாகவிடுகிறது. எனவே, அவற்றை தடுக்க இனி வீட்டிலேயே இயற்கையான ஸ்கின் வைட்னிங் கிரீமை தயாரித்து பயன்படுத்தலாம்.  இது முழுக்க முழுக்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை உடல் முழுவதும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே வாரத்தில் அப்பகுதியில் இருக்கும் கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்களே கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வாங்க! இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ➦ பன்னீர் ரோஸ் - 3 பூக்கள் ➦ ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் ➦ கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் ➦ கிளிசரின் - 1 ஸ்பூன் ➦ வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2 ➦ பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன் வீட்டிலேயே ரோஸ் க்ரீம் தயாரிப்பது எப்படி? ➦ முதலில் நாம் எடுத்துவைத்துள்ள பன்னீர் ரோஜாவை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் மைய அரைத்துக் கொள்ளவும்.  ➦ பின்னர், அதில் 2 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த விழுதை ஒரு வெள்ளை துணியில் கொட்டி நன்றாக பிழிந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். ➦ பின்பு, அதில் பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருக்கும் ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூனை பயன்படுத்தி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.  ➦ இவ்வாறு அடித்துக் கலக்கும்போது ஜெல் ரோஸ் கலரில் கிடைக்கும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரோஸ் க்ரீம் தயார். எப்படி பயன்படுத்துவது? ➦ தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு நாம் தயாரித்து வைத்துள்ள க்ரீமை அப்ளை செய்துக் கொள்ள வேண்டும். அடர்த்தியாக அப்ளை செய்யக்கூடாது. அதாவது, நாம் முகத்தில் சீரம் எப்படி பயன்படுத்துவோமோ அதேபோல் அப்ளை செய்ய வேண்டும். அதாவது, க்ரீமை விரலால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அப்படியே தடவ வேண்டும்.  ➦ இவ்வாறு செய்யும்போது முகம் இந்த க்ரீமை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். அதன்பிறகு தூங்க செல்லலாம். வேண்டுமென்றால், காலை மாலை இருவேளையும் பயன்படுத்தலாம். மேலும், உடல் முழுவதும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் சருமம் ஜொலி ஜொலிப்பாக மாறும். ஆனால், தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். 

கைகளில் இருக்கும் சுருக்கம் நீங்கி மென்மையான சருமத்தை பெற ஈஸியான டிப்ஸ்.. | How to Remove Wrinkles from Hands Naturally

Nandhinipriya Ganeshan July 18, 2023

பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது. ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சரி வாங்க, சுருக்கம் இல்லாத கைகளுக்கு வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம். எலுமிச்சை ஸ்க்ரப்: நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 - 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம். பால்: பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 - 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 - 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும். அன்னாசி கூழ்: வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில்: தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும். வாழைப்பழம்: மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

சரும துளைகளை சிறிதாக்கி முகத்தை ஜொலிக்க வைக்க ஸ்டிராபெர்ரி சுகர் ஸ்கிரப் | Strawberry Sugar Scrub Benefits

Priyanka Hochumin July 05, 2023

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்டிராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.

முடி கொட்டுவதை தடுத்து அடர்த்தியான முடி வளர செய்யும் ஹேர் சீரம்.. | How to Make Serum for Hair Growth

Nandhinipriya Ganeshan July 04, 2023

அடர்த்தியான முடியை பெறுவது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் ஒன்றுமில்லை. மிகவும் எளிமையான முறையில், தலை முடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய இயற்கையான அழகு குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எது உங்களுடைய கூந்தலுக்கு செட்டாகிறது என்பதை கண்டிப்பிடுத்துவிட்டாலே போதும். நீண்ட அடர்த்தியான முடியை பெறுவதற்காக நம்மில் பலரும் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சீரம் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், அவை அனைத்தும் முடிகளுக்கு நன்மையளிக்க கூடியவை அல்ல. எனவே அதற்கு மாறாக இயற்கை முறையை கையாளலாம். இருப்பினும், அனைவருக்கும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் பேக் ஒத்துக்காது, அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, உடலுக்கு தகுந்தபடி ஹேர் பேக்குகளை பயன்படுத்துவதே சிறந்தது. ஆனால், ஹேர் பேக்கை விட ஹேர் சீரம் அனைவரும் செட்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, ஹேர் பேக் செட்டாகவில்லை என்றால், ஹேர் சீரம் பயன்படுத்துவது. அப்படி ஒரு சுலபமான வீட்டில் இருக்கக்கூடிய பொருட்காய் வைத்தே தயார் செய்யக்கூடிய ஒரு ஹேர் சீரம் தான் பார்க்கப் போகிறோம். ஹேர் சீரம் தயார் செய்யும் முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும். பின்னர், அந்த தண்ணீரில் 1 டீஸ்பூன் டீ தூள், 1 ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடியளவு மருதாணி இலை, 2 பெரிய வெங்காயத்தின் தோல் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். நாம் ஊற்றிய ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டி வரும் வரை கொதிக்க விடவும். பின்னர், அதை வடிக்கட்டி நன்றாக ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். அதை அப்படியே தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து மென்மையாக மசாஜ் செய்து சுமார் 30 நிமிடம் கழித்து நீங்கள் எப்பவும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசிவிடுங்கள். ஒருவேளை உங்க வீட்டில் ஸ்ப்ரே பாட்டில் இல்லையென்றால், காட்டன் பஞ்சை அந்த சீரமில் நனைத்து வேர்க்காலில் வைத்து வைத்து எடுங்கள். பிறகு மென்மையாக மசாஜ் செய்துவிட்டு குளித்துவிடுங்கள். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்துவர உங்கள் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளர தொடங்கிவிடும். தொடர்ந்து ஒரு மாதம் இதை முயற்சி செய்து பாருங்கள். அப்போதுதான் அதன் ரிசல்ட் உங்களுக்கு தெரியும்.

செலினா கோமஸின் Rare Beauty ப்ராடக்ட் இந்தியாவில் அறிமுகம் | Selena Gomez Rare Beauty Launch in India

Priyanka Hochumin June 03, 2023

செலினா கோமஸின் 'Rare Beauty' அழகு சாதன பொருட்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த Rare Beauty பிராண்ட் 2019 ஆம் ஆண்டு மிகவும் திறமையான கலைஞரால் நிறுவப்பட்டது. இது ஒரு சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த அழகு சாதனங்களை பயன்படுத்தும் மக்கள் நல்ல ரிவ்யூக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிராண்ட் தன்னுடைய தனித்துவம், எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளின் விரிவாக்கம் என்றும் செலினா குறிப்பிடுகிறார்.

இந்த பேஸ்ட் பயன்படுத்தினால் தலை முதல் கால் வரை பொலிவுடன் மின்னும் அப்படி என்ன பேஸ்ட் ?

Vaishnavi Subramani April 04, 2023

இன்றைக்குப் பலரும் தலைக்கு ஒரு வகையான பேஸ்ட் மற்றும் பராமரிப்பு, உடலுக்குத் தனி பேஸ்ட் மற்றும் பராமரிப்பு, எனப் பல வகையான க்ரிம்கள் பயன்படுத்துவார்கள். இதில் முகத்திற்கு எனப் பல க்ரிம்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில் பல வகையான க்ரிம்கள் உடலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதன் மூலம் சில நாட்கள் மட்டும் தான் பலன் தரும். சில நாட்கள் மட்டும் பலன் தரும் க்ரிம்களை அதிகமாகக் காசு செலவு செய்து வாங்கி பயன்படுத்துவார்கள்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!

Vaishnavi Subramani April 03, 2023

தேன் என்பது இயற்கையான ஒன்று இதைப் பல வகையான இயற்கை க்ரிம்களில் பயன்படுத்துவார்கள். இது இல்லாத க்ரிம் என எதுவும் இருக்காது. இதை உடல் எடை குறைப்பதற்கு மற்றும் உடலில் பல பிரச்சனைகளைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்துவார்கள். இதில் ஒரு பொருளைச் சேர்த்து முகத்திற்குப் பயன்படுத்தும் ஒரு க்ரிம் தயார் செய்யலாம். இந்த பதிவில் தேனுடன் இந்த பொருள் சேர்த்தால் முகம் மிகவும் அழகாக மாறுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair

Gowthami Subramani April 02, 2023

எப்படி பராமரித்தாலும், இந்த ஒரு பிரச்சனைக்கு மட்டும் தீர்வு கிடைப்பதில்லை. அப்படி என்ன பிரச்சனை என்று நீங்கள் சிந்திக்கிறீர்களா.? வேறு எதுவும் இல்லை. முடி பராமரிப்பு பிரச்சனை தான். முடியைப் பொறுத்த வரை, முடி வறட்சி, இளநரை, செம்பட்டை முடி போகுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால், இதற்கு பல்வேறு தீர்வுகள் உள்ளன. அந்த வகையில், செம்பருத்தியை வைத்து முடி பிரச்சனைகளை நீக்க முடியும். எவ்வாறு செம்பருத்தியை வைத்து முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்க முடியும் என்பதை இதில் பார்க்கலாம்.

ரோஜா இதழ் பயன்படுத்தினால் முகம் மற்றும் உடல் அழகாக மாறுமா !!!

Vaishnavi Subramani March 31, 2023

இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். அந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தனியாக பவுடர் செய்தால் எப்படி இருக்கும். ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது. இந்த ரோஜா இதழ்களைச் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சருமத்தில் பிரச்சனைகள் இருந்தால் இது எளிதில் சரிசெய்து தரும். இந்த பதிவில் ரோஜா இதழ்கள் பயன்படுத்தினால் முகம் மற்றும் உடல் அழகாக மாறுமா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முகம் மற்றும் உடலை அழகாக வைக்க இந்த பவுடரை ட்ரைப் பண்ணுங்க !!!

Vaishnavi Subramani March 28, 2023

பெண்கள் முகம் அழகாக இருப்பதற்கு, கடைகளில் விற்கும் க்ரீம் வாங்கி பயன்படுத்துவது எனப் பல க்ரீம்  பயன்படுத்துவார்கள். ஆனால் சிலருக்கு முகத்திற்குச் சேராமல் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இயற்கையாகவே உள்ள பொருள்கள் பயன்படுத்தி முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சிலர் நினைப்பார்கள் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.