Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….

Gowthami Subramani October 10, 2022 & 20:00 [IST]
எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது மிக முக்கியதான ஒன்றாகும். ஆனால், ஒரு சிலர் சேமிக்க வேண்டும் என நினைக்கும் போது, அவர்களால் சேமிக்க முடியாமல் போகலாம். இதற்கு அவர்களது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில விஷயங்களே காரணமாக அமையும். அதனை மாற்றினால், நாம் சேமிக்கும் பழக்க வழக்கங்கள் நமக்கு தானாகவே தோன்றும். இந்தப் பதிவில், எந்த காரணிகள் நம்மை பணத்தை சேமிக்க முடியாமல் செய்கின்றன என்பதைப் பற்றி இதில் காண்போம்.

இதில் கூறப்படும் சில காரணிகள் உங்களை சேமிக்க விடாமல் தடுக்கும் காரணிகளாக அமையும். இதில் ஏதேனும் ஒரு விஷயம் இருந்தால் கூட, அது நம்மை சேமிக்கும் முயற்சிக்கு விடாது. இதில் உள்ளவற்றைக் கவனமாக தெரிந்து கொண்டு, உங்களது சேமிப்பிற்கான வழியை மேம்படுத்துங்கள்.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

மற்றவர்களை ஒப்பிட்டு செலவு செய்தல்

நாம் வாழ்வது நமக்காக தான். நாம் செலவு செய்வதும், சேமிப்பதும் நமக்காகத் தான் இருக்க வேண்டும். மற்றொருவர் ஒரு செலவு செய்கிறார் என்றால், அது அவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். அந்த செலவு உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், இன்னொருவர் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்கிறார் என்று, நாமும் செலவு செய்வோம். இது போல, மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களை விட அதிகமாக செலவு செய்வது கொண்டிருப்பர். மற்றவர்களை ஒப்பிட்டு செலவு செய்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள் என்று பயந்து

நீங்கள் பணம் அதிகம் செலவு செய்யாதவராக இருந்து சேமித்து வருவதன் மூலம், அது உங்களுக்கு நல்ல ஒரு பலனையே தருகிறது. அதிகமாக செலவு செய்யாமல் இருந்தால், ரொம்ப ஏன் சிக்கனம் செய்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு பயந்து ஒரு சில பேர் செலவு செய்வர். உங்களுக்குத் தேவையானவற்றிற்காக மட்டும் பணத்தை செலவிடுவது தவறு அல்ல. தேவையில்லாதவற்றிற்கும் சேர்த்து செலவு செய்வது உங்களது சேமிப்புக்கு வழிவகுக்காது.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

எஸ்கியூசஸ் கூறுதல்

நீங்கள் சேமிக்க வேண்டும் என நினைத்தால், கட்டாயம் அதற்கான வழியை மேற்கொள்ள வேண்டும். செலவு என்பது ஒவ்வொரு முறையும் எதாவதொரு வழியில் வந்து கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் செலவு செய்து விட்டு, இந்த காரணத்தினால் என்னால் இந்த முறை சேமிக்க முடியவில்லை. அடுத்த முறையிலிருந்து சேமிக்கிறேன் என ஒரு காரணத்தை உருவாக்கக் கூடாது. சேமிக்க நினைக்கும் பெரும்பாலானோர்க்கு இருக்கக் கூடிய முக்கிய காரணி இதுவாகத் தான் இருக்கும். ஏனெனில், செலவு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இல்லாமல் இருக்காது. எனவே, எந்தவொரு Excuses-ம் சொல்லாமல், சேமிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். முக்கிய தேவைக்காக செலவு செய்வது தவறில்லை. தேவையில்லாத ஆடம்பரச் செலவு செய்து விட்டு, என்னால் சேமிக்க முடியவில்லை எனக் கூறக்கூடாது.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

எதற்கு சேமிக்கிறோம் என தெரியாமல் இருப்பது

நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால், கட்டாயம் ஒரு காரணம் இருக்கும். Long Term Goal ஒன்றை செட் செய்து கொள்வது நல்லது. வீடு கட்டுவதற்கு, தொழில் செய்வதற்கு, கார் வாங்குவதற்கு, அவசரத் தேவைக்காக இப்படி எதாவதொரு காரணம் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அந்த Goal-காக நம்மால் சேமிக்க முடியும். இல்லையெனில், எதாவதொரு செலவுக்கு வேண்டும் என எடுத்துக் கொள்வோம்.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

யோசிக்காமல் செலவு செய்தல்

செலவு செய்வது என்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதனையே சேமிக்க வேண்டும் என்றால் சிறிதல்ல பெரிதும் கஷ்டமாகத் தான் இருக்கும். கையில் பணம் இருக்கும் போது செலவு செய்ய நம்ம மனம் ஏங்கும். ஹோட்டலுகுச் சென்று சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு எண்ணங்கள் தோன்றும். ஆனால், மனதைக் கட்டுப்படுத்தி, நம்முடைய Goal-ஐ மனதில் நிறுத்தி செலவு செய்யும் எண்ணத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு சேமிக்காமல் செலவு செய்து கொண்டு இருப்பதன் மூலம், பணம் இல்லாத நிலை ஏற்பட்டு அந்த சமயத்தில் கடன் வாங்க நேரிடும்.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

உங்களை நீங்களே முதலீடாக்க வேண்டும்

நாம் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவே ஆகலாம். ஆனால், இதன் முதல் முயற்சியாக நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். இப்போது ஒருவருக்கு பணக்காரர் ஆக வேண்டும் என ஆசை. ஆனால், அதற்காக எந்த வித முயற்சியும் எடுக்காமல் இருந்தால் ஆகிவிட முடியாது. நம்மால் முடிந்தவற்றை செய்து, முயற்சி செய்ய வேண்டும். இதனை நம்மை முதலீடாக வைப்பது என்றும் கூறலாம். அதாவது, எப்படி பணம் சம்பாதிக்கலாம். ஒரு தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோமா..? நேரத்தை வீணாகக் கழிக்கிறோமோ உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொண்டு சேமிப்பதற்கு எது தேவையோ அதனை மட்டும் பார்க்க வேண்டும்.

எவ்ளோ சம்பாதிச்சாலும் காசு கையில இருக்க மாட்டிக்குதா..? அதுக்கு இது தான் காரணம்….Representative Image

நேரம் வரும் எனக் காத்திருத்தல்

சேமிப்பு செய்வதற்கு சரியான நேரம் என ஒருவருக்கு வராது. இருக்கும் நேரத்தையும், பணத்தையும் வைத்து நாம் சரியான நேரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் பணம் என்பது முக்கியமானதாயிற்று. பிற்காலத்தில் நம்மைக் காக்க யாரும் இல்லையென்றால், நாம் சேமித்து வைப்பதன் மூலம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். இது உங்களுக்கு ஒரு முக்கியமான தருணம் ஆகும். இந்த நிலையில் நீங்கள் சேமிப்பீர்கள் என்றால், கட்டாயம் மிகப் பெரிய அளவில் சேமிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்