Second Trimester of Pregnancy in Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். முதல் மூன்று மாதங்கள் முடிந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு அடியெடுத்து வைக்கும் கர்ப்பிணிகளுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் கட்டமாகும். இந்த கட்டத்தில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் மனதில் இருந்து விலகி ஒரு புத்துணர்வு கிடைக்கும். இப்போது, நான்காவது மாதத்தில் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது, அதன் எடை எவ்வளவு என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் குழந்தை எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
குழந்தையின் வளர்ச்சி:
கர்ப்பத்தின் நான்காவது மாதம் என்பது வாரங்களில் 13 முதல் 16 வரை இருக்கும். இந்த கட்டத்தில் கருவின் இதயத் துடிப்பு டாப்ளர் எனப்படும் கருவி மூலம் கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கும்.
கைவிரல்கள் மற்றும் கால்விரல்கள் நன்கு வளர்ந்திருக்கும். கண் இமைகள், புருவங்கள், நகங்கள் மற்றும் முடி உருவாகியிருக்கும்.
பற்கள், எலும்புகள் மற்றும் சிறிய தசைகள் வலிமை பெறுகின்றன. மேலும் இந்த மாதத்தில் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பிக்கும். முதுகெலும்பு பலமாகிவிட்டதால் குழந்தை தலை மற்றும் கழுத்தை நேராக்க முடியும்.
இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் பிறப்புறுப்புகள் இப்போது முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும். இந்த நிலையில் அல்ட்ராசவுண்ட் கருவியை பயன்படுத்தி கரு ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
இந்த கட்டத்தில் குழந்தைக்கு கொழுப்பு இல்லாததால் ஒல்லியாக தோற்றமளிக்கும். இதனால், அல்ட்ராசவுண்டில் அவர்களுடைய தோலின் கீழ் உள்ள இரத்த நாளங்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும்.
வெறும் அரை மணி நேரம் நடங்க.. அது தரும் பலன்களை பாருங்க..
நான்கு மாத கருவின் அளவு:
கர்ப்பத்தின் நான்காவது மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை 3 முதல் 4 அவுன்ஸ் எடையும், 4 முதல் 5 அங்குல நீளமும் கொண்டு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
குழந்தையின் அசைவு:
இந்த கட்டத்தில் குழந்தை ஒரு மணி நேரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை நகரும். உங்கள் அடிவயிற்றில் லேசான அசைவுகளை உணர முடியும்.
கரு தனது கட்டைவிரலை உறிஞ்சி, கெட்டாவி விடவும், நீட்டவும் முடியும். அழகிய கண்கள் ஒளியை உணர துவங்கும் இருப்பினும் கண் இமைகள் மூடப்பட்டிருக்கும்.
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?
அதேப்போல், செவித்திறன் வலிமையடைந்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கேட்டும் பாடலை அவர்களால் கேட்க முடியும்.
உங்கள் சிறிய குழந்தை அவர்களின் தொப்புள் கொடியைப் பிடித்து விளையாடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…