Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
104.99sensex(0.14%)
நிஃப்டி22,055.70
32.35sensex(0.15%)
USD
81.57

தமிழ்நாடு உலா

கூட்டமே இல்லாத சூப்பரான சுற்றுலா தலம்.. இந்த இடத்த பத்தி தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க.. | Sirumalai Places to Visit

Editorial Desk July 24, 2023

வணக்கம் இனிய தமிழ் வாசக நண்பர்களே… அடிக்கர வெயிலுக்கு ஊட்டி,கொடைக்கானல் போலாம்னு பிளான் பண்ணி கூட்டநெரிசலுக்கும்,போக்குவரத்து நெரிசலுக்கும் பயந்து அந்தப் பிளான்னா கைவிட்டவங்க எத்தனை பேர்? கவலை படாதீங்க அதில் நானும் ஒருவரே… அந்த சமயத்தில் தான் எனது நண்பர் ஒருவர் மலைகளின் சின்ன இளவரசி பற்றி பகிர்ந்தார். என்னது சின்ன இளவரசியா?.. மலைகளின் இளவரசி தெரியும் அது ஏன்னா சின்ன இளவரசினு யோசிக்கரிங்களா? அப்போ வாங்கா சுற்றிபார்ப்போம். மலைகளின் சின்ன இளவரசி என்று செல்லமாக அழைப்பது சிறுமலை. சிறுமலை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 6000 ஏக்கர் பரப்பளவுள்ளவை. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்க சுற்றிபார்க்க என்னதான் இருக்கு? இருக்கு, இயற்கையோடு கொஞ்சும் முக்கியமான இடங்களை ரசித்துக்கொண்டே சுற்றி பார்ப்போம் வாருங்கள்..! அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் மலையின் உச்சியில் சரிவான பகுதியில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும். சிறுமலை நிர்த்தேக்கம் இது 2010 ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. உயர் கோபுரம் மலையில் ஏறும் போது 17வது கொண்டை ஊசி வளைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் உச்சியில் நின்று பார்த்தால் அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் சிறுமலையின் மற்ற மலைத்தொடர்களை இப்பகுதியில் நின்று காணலாம் . சஞ்ஜீவனி மலை சிறுமலையின் ஒருபகுதியாக உள்ள இம்மலையில் தான் ராமாயனத்தில் ராவனனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்குத் மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டறிய ஐயமுற்று சஞ்சிவினி மலையையே தூக்கிச் சென்றபோது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது. சாதியாறு சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாசன பகுதிகள் மதுரை மாவட்டத்திலுள்ளன. அகஸ்தியர்புரம் அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. வெள்ளிமலை அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். வெள்ளிமலை முருகன் கோவில் மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இக்கோவில் அமைந்துள்ளது. சரி சரி நண்பர்களோடு செல்வோர்க்கு பொழுதுபோக்கு எதுவும் இல்லையா? சொல்கிறேன் கேளுங்கள் இளைஞர்களுக்கு பிடித்தவகையில் மலையேற்றமும் செல்லலாம். அவ்வளவுதானா? இன்னும் இருக்கு சொல்லுற கேளுங்க.. அறுபடை தலங்களில் ஒன்றான பழனி முருகன் கோவில் அறுட்பிரசாதமான பஞ்சாமிர்தம் சிறுமலை பகுதியில் விலையும் வாழை பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. நீங்கள் சிறுமலைக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் வாழைப்பழங்களை சுவைக்க மறந்துவிடாதிர்கள். அதுமட்டுமின்றி மலை உச்சியில் 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கமும் உள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அங்கு வசிக்கும் புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான், காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, மெல்லிய லோரிஸ், சிறுத்தை போன்ற வனவிலங்குகலையும் கண்டுகளிக்கலாம் எப்படி சென்றடைவது? திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர் அருகிலும், மதுரைக்கு 40 கிலோமீட்டர் அருகிலும் அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதியும் உள்ளது. அதிக பட்ஜெட் இல்லாமல் குறைவான பட்ஜெட்டில் நிறைவான மகிழ்ச்சி அளிக்கும் இடமாக இவ்விடம் உள்ளது. இயற்கை அழகில் அதிக மக்கள் கூட்டம் இன்றி ரம்மியமாக பொழுதை கழிக்க ஏற்ற இடம் இந்த சிறுமலை. இந்த சம்மர் முடிஞ்சுருச்சுன்னு கவலைபடாதிங்கா, உங்களுக்கு எப்போ விடுமுறை கிடைத்தாலும் சிறுமலைக்கு போக மறக்காதிங்க…

பொள்ளாச்சிக்கு போனா இந்த இடங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.. | Pollachi Tourist Places in Tamil

Editorial Desk July 18, 2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரம் தான் பொள்ளாச்சி. கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் விவசாயத்திற்கும் பெயர் பெற்ற நகரமான இந்த பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய நிலப்பரப்புகளும் அமைதியான சூழ்நிலைகளும் நம்மை வியப்படைய செய்கிறது. தென்னை மற்றும் வாழை சாகுபடிக்கு பெயர்ப்போன பொள்ளாச்சியில் சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளன. வீக்எண்ட் டிரிப் செல்ல நினைப்பவர்களுக்கு பொள்ளாச்சி ஒரு பெஸ்ட் சாய்ஸ் என்றே சொல்லலாம். சரி வாங்க, பொள்ளாச்சியில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். வால்பாறை: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இடம் தான் வால்பாறை. ஆரம்பத்தில் பூணாச்சி மலை என்று அழைக்கப்பட்ட இந்த மலையில் அமைந்துள்ள தொடர்ச்சியான மலைகள் கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை காண முடியும். தேயிலை தோட்டங்களையும் கொண்டுள்ளது. வால்பாறையின் அழகை வர்ணிக்கும் வகையில் ஆங்காங்கே நீருற்றுகள், அருவிகள் நாம் காணலாம்.ச் ஆனமலை புலிகள் சரணாலயம்: பொள்ளாச்சி வால்பாறை தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு மலை பகுதியே ஆனமலை. பல்வேறு தாவரங்களுக்கும், விலங்களுக்கும் இருப்பிடமாக உள்ள சரணாலயத்தில் யானை, சிறுத்தை, நீலகிரி தஹ்ர், சிங்கவால் மக்காக், கவுர், நீலகிரி லங்கூர், சோம்பல் கரடி, மலபார் ஸ்பைனி, சாம்பார் மான் முதலிய விலங்குகளும்; வாத்து, காடை, கிளுவை, இருவாயக்குருவி, பாறு கழுகு, மீன்கொத்தி முதலிய பறவைகளும் உள்ளன. இதனை இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்றும் தேசிய பூங்கா என்றும் அழைப்பதுண்டு. இது மட்டுமின்றி 2000க்கும் மேற்ப்பட்ட மரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது இந்த ஆனமலை.    ஆழியார் அணை: 'ஆழி' என்றால் 'கடல்' என்று பொருள். கடல் போன்று காட்சி அழிப்பதால் இதற்கு ஆழியார் என்றும் பெயர். இந்த அணையானது மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள முக்கியமான ஒரு சுற்றுலா தளம் ஆகும். இந்த அணையானது ஆண்டு முழுவதும் நீர் வற்றாமல் பாயும் என்பதால், ஆழியார் நதிக்கு நீர் தேக்கம் செய்து அதனை சுற்றியுள்ள இடங்களுக்கும், விவசாயத்திற்கு தேவைப்படும் நீரையும் தருகின்றது. அதுமட்டுமின்றி, இங்கிருந்து நீர் மூலம் மின்சாரமும் எடுக்கப்படுகிறது. இந்த அணையை சுற்றி பசுமையான காடுகளும் இருக்கின்றது, எனவே இயற்கையை ரசித்து கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடக்கலாம். இங்கு குழந்தைகளுக்கு பூங்காவும் உள்ளது. சிறுவாணி அணை: சிறுவாணி அணையானது மேற்கு தொடர்ச்சி மலைகளான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் உருவாகி வடக்கு நோக்கி பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கிறது. இது இதன் தூய்மையான நீரும், அழகான சூழ்நிலையும் தன்னுள் கொண்டுள்ளது. இங்கு நாம் படகு சவாரி செய்து சிறுவாணி ஆற்றின் அழகை, மலையின் அழகையும் ரசிக்கலாம். கோயம்புத்தூரில் இருந்து 36 கி.மீ தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த அணையை கேரள அரசுடன் தமிழ்நாடு அரசு இணைந்து கட்டியுள்ளது. சிறுவாணி ஆற்றின் நீரை தான் கோயம்புத்தூர் பகுதியில் மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் கலைகளை இந்த அணையின் சாலைகளில் நாம் காணமுடியும். அதேபோல், பழங்குடி மக்களான இருளர் மற்றும் முதுவர்களையும் காணலாம்.  குரங்கு அருவி: குரங்கு அருவி ஆனமலை மலைத்தொடரில் பொள்ளாச்சி–வால்பாறை சாலையில் அமைந்துள்ளது. வால்பாறை மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சியான இந்த அருவி ஆழியார் அணையிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்விழ்ச்சியின் அழகை நாம் கண்டு மகிழலாம். சின்னார் வனவிலங்குக் காப்பகம்: இது மறையூருக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக உடுமலைப்பேட்டை- மூணார் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு 34 வகையில் பாலூட்டிகளும், 245 வகையான பறவைகளும், 52 வகையான ஊர்வனங்களும் வாழ்கின்றது. மேலும், 965 வகையான பூக்களும் உள்ளன. சோலையார் அணை : ஆனமலையில் உள்ள மலை வாழிடமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளத இந்த சோலையார் அணை. இதுவே இந்தியாவின் 2வது ஆழமான அணையாகும். இந்த சோலையார் அணை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக விளங்குகிறது. இதன் நீர் சேமிப்பு திறன் 160 அடி (49மீ) ஆகும். இந்த அணையை பார்க்க சிறப்பு அனுமதி தேவை.

நம்ம தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளும் அதன் சுவாரஸ்யங்களும்.. | Best Beaches in Tamilnadu

Nandhinipriya Ganeshan June 09, 2023

நம்மில் பலருக்கும் சுற்றுலா போக வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீர்நிலை சார்ந்த பகுதிகளை தான் தேர்வு செய்வோம். அதுவும் கடற்கரை பகுதி ஒருபடி மேல் என்றே சொல்லலாம். அப்படி கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே, நம் தமிழ்நாட்டில் உள்ள ஃபேமஸான கடற்கரைகளை பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து சென்று வாருங்கள். மெரினா கடற்கரை: கடற்கரை என்றவுடன் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரையாக தான் இருக்கும். உலகளவில் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாக விளங்கும் இந்த மெரினா கடற்கரை, தெற்கில் பெசன்ட் நகரிலிருந்து வடக்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 1880 ஆம் ஆண்டுகளில் கவர்னர் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் என்பவரால் புதுப்பிக்கப்பட்ட இந்த கடற்கரை அன்றிலிருந்து சென்னை நகரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த கடற்கரைக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு பல புகழ்பெற்ற இந்திய தலைவர்களின் வாழ்கையை நினைவுக்கூறும் வகையில் ஏராளமான நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. தனுஷ்கோடி கடற்கரை: இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத் தீவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த தனுஷ்கோடி கடற்கரையில் தான் வம்கள விரிகுடாவும், இந்திய பெருங்கடலும் ஒன்று கூடுகின்றன. இலங்கையுடன் வாணிபம் செய்வதற்காக பயன்படுத்த சிறந்த துறைமுகமாவும் இருந்தது. எப்போதும் கூட்டம் அலைமோதும் இடமாக காணப்பட்ட இந்த தனுஷ்கோடி தற்போது ஆளே இல்லாத பாலைவனம்போல காட்சியளிக்கிறது. ஆமாங்க, 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான சூராவலியால் தனுஷ்கோடயே மொத்தமாக அழிந்துப்போய்விட்டது. இந்தியாவின் எல்லையாக விளங்கும் இந்த தனுஷ்கோடியில் தான் ராமர் வானரங்களை கொண்ட கற்களால் கட்டப்பட்ட அதிசய பாலம் இருந்தது. தற்போது சுற்றுத்தல இடமாக இருந்து வரும் இங்கு அமைந்திருக்கும் ராமர் கோவிலில் இன்றும் ஒரு கல் தண்ணீரில் மிதந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி கடற்கரை: இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் தான் அரபிக் கடல், இந்திய பெருங்கடல் மற்றும் வங்காளா விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கின்றன. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த குமரி கடலின் நடுவில் தான் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் உள்ளது. இங்கு சூர்ய உதயம் மற்றும் சூர்ய மறைவு இரண்டையும் அருகில் இருந்து கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல், சித்ரா பௌர்ணமி தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே அடிவானத்தில் இருக்கும் அழகிய காட்சியை பார்க்க முடியும். கோவளம் கடற்கரை: கோவளம் என்ற பெயரைக் கேட்டாலே கேரளாவிலிருக்கும் (திருவனந்தபுரம்) கடற்கரை தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், நம்ம தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலும் 'கோவளம்' என்ற பெயரில் ஒரு அழகிய கடற்கரை இருக்கிறது. சென்னையில் இருந்து 40 கி.மீ தென் திசையில், கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் செல்லும் வழியில், கோவளம் என்ற மீனவ கிராமம் இருக்கிறது. இங்கு அமைந்திருக்கும் கடற்கரை தான் கோவளம். சென்னையில் காணப்படும் மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த கோவளத்தில், பாறைகள் மீது அலைகள் மோதி அடிக்கும் காட்சியையும், மணல் நிறைந்த நீண்ட கடற்கரைப் பகுதியையும், நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த கடற்கரையின் வளைவானத் தோற்றம் இதன் அழகை மேலும் மிளிரச் செய்கிறது. மகாபலிபுரம் கடற்கரை: கோவில்கள் முதல் அற்புதமான சிற்பங்கள் நிறைந்தை வரலாற்று சிறப்புடைய இடமான மகாபலிபுரம் தங்க மணல் நிறைந்த கடற்கரைக்கு பெயர் பெற்றது. பளபளக்கும் கடல் மற்றும் உருளும் மலைகளால் சூழப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை வங்காள விரிகுடாவின் கரையோரமாக உள்ளது. ஆண்டுதோறும் சுற்றுப்பயணிகளால் நிரம்பி வழியும் இந்த கடற்கரை இந்தியாவின் மிக நீளமான கடற்கரைகளில் (20 கி.மீ) ஒன்றாகவும் உள்ளது. மேலும், இந்த கடற்கரை டைவிங், விண்ட்சர்ஃபிங் மற்றும் மோட்டார் படகு சவாரி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது. சொத்தவிளை கடற்கரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சொத்தவிளை கடற்கரையில் நீரின் ஆழம் குறைவு. எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி நீந்தலாம். 4 கிமீ நீளம் கொண்ட சொத்தவிளை தமிழகத்தின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோத்தவிளையும் ஒன்றாகும். இருப்பினும், கடற்கரை புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வெள்ளி கடற்கரை: கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வெள்ளி கடற்கரையானது, சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தப்படியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுகிறது. அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே இருக்கும் மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்துள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மேலும் ஆங்கிலேயர் காலத்து கட்டிடமான புனித டேவிட் கோட்டை மற்றும் ஏராளமான சுற்றுலா இடங்கள் அங்கு இருக்கின்றன.

ஹாப்பி நியூஸ்.. கொளுத்தும் வெயிலை குளிர்விக்க சென்னைக்கு வருகிறது வொண்டர்லா.. | Chennai Wonderla

Nandhinipriya Ganeshan May 29, 2023

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட வொண்டர்லா ஹாலிடேஸ் [Wonderla Holidays] என்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை கொச்சி, பெங்களூரு, மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெரிய அளவில் வளர்ச்சியை கண்டு வரும் இந்நிறுவனம் தொடர்ந்து நாட்டின் பெரும் நகரங்களில் புதிய பொழுதுபோக்கு பூங்காக்களை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி, சென்னை மற்றும் ஒடிசாவில் புதிய பொழுதுபோக்கு பூங்காவை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. அந்தவகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் பதிப்பில் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்காக, 2018 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் 60 ஏக்கர் அளவிலான நிலபரப்பு கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு விதிக்கும் உள்ளாட்சி வரி (எல்பிடி) தொடர்பான பிரச்னைகளால், இத்திட்டத்தை மேற்கொண்டு செயல்பட முடியாமல் போனது. தற்போது, ​​மாநில அரசு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு மேல் 10 சதவீத எல்பிடியை விதித்து வருகிறது. இது பல பொழுதுபோக்கு பூங்கா நிறுவனங்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்கும் விதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஏழு ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, வொண்டர்லா ஹாலிடேஸ் சென்னையில் அதன் புதிய பொழுதுபோக்கு பூங்காவின் பணிகளைத் தொடங்க உள்ளது. இது குறித்து வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தில் MD அருண் கே சிட்டிலப்பிள்ளி கூறியதாவது, ' நாங்கள் உள்ளாட்சி அமைப்பு வரியில் 10 ஆண்டுகள் தள்ளுபடி கேட்டிருந்தோம், அரசும் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. அதனால், மீண்டும் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்'. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய பொழுதுபோக்கு பூங்காவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும், அதன்பிறகு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறனார். மேலும், வொண்டர்லா நிறுவனம் சென்னையில் நிலத்திற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், சென்னைக்கு முன்பாக பூங்காவை ஒடிசாவில் அமைக்கப்பதற்கான கட்டுமான பணிகளை மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வொண்டர்லா திறக்கப்படும் நேரம், டிக்கெட் விலை, செல்லும் வழி போன்றவை விரைவில் அப்பேட் செய்யப்படும்.

சர்ஃபிங் பண்ணனுமா? அப்ப தமிழ்நாட்டுல இந்த இடத்துக்கெல்லாம் போங்க.. | Best Surfing Destinations in Tamil Nadu

Gowthami Subramani January 09, 2023

இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்கள் சுற்றுலா இடங்களாகக் காட்சி தருகின்றன. தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்கள், பாரம்பரியமிக்கதாகவும், கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. மேலும், தமிழகத்தில் சிறந்த சர்ஃபிங் இடங்கள் உள்ளன. இவை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். இதனால், கடற்கரைகளின் அலைகளில் சவாரி செய்வதை, அனைவருமே விரும்புவர். அந்த வகையில், தமிழகத்தில் எந்தெந்த இடங்கள் சிறந்த சர்ஃபிங் இடங்களாக உள்ளது என்பது குறித்து இதில் காண்போம்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in Tamilnadu

Gowthami Subramani January 06, 2023

தமிழக வீரர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற விளையாட்டாகும். வட, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விளையாடப்படுகிறது. இருப்பினும், தென்மாவட்டங்களிலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான பங்கேற்பும், ஆவலும் அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு ஆண்டுதோறும் மக்களின் வருகைக்கேற்ப தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களைப் பற்றி இதில் காணலாம்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் இடங்கள் | Famous Pongal Celebrating Places

Priyanka Hochumin January 06, 2023

தை திருநாள் பண்டிகையின் போது அனைவரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மொத்தம் நான்கு நாட்கள் பண்டிகை கொண்டாடப்படும். பொங்கலுக்கு முந்தைய நாளே வீட்டு வாசலில் வண்ண கோலங்கள் போட்டுவார்கள். பொங்கல் அன்று அனைவரும் புத்தாடை அணிந்து, வீட்டின் நிலவு கதவில் மாங்காய் இலையால் தோரணம் கட்டி, சூரிய பகவானை வழிபட்டு, மண் பானையில் பொங்கல் வைப்பார்கள். பின்பு பொங்கலை சூரிய நாகவனுக்கு படைத்ததும் குடும்பம் மொத்தமும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in Tamilnadu

Gowthami Subramani December 26, 2022

புத்தாண்டில், புது ஆடைகளை உடுத்தி இனிப்புகளை பரிமாறி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்வர். அதே போல, இந்த புத்தாண்டை வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக மாற்றுவதற்கு, பல்வேறு இடங்களுக்குக் குடும்பங்களுடன் சென்று, மகிழ்ச்சியான தருணத்தைச் சேகரித்து வைப்பதும் ஆகும். அதன் படி, நம் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட வேண்டிய சிறந்த இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Best of 2022 | கலாச்சாரம் பிறந்த தமிழ்நாட்டில் அதிக மக்கள் சுற்றுலா சென்ற இடங்கள்

Priyanka Hochumin December 26, 2022

லட்சக்கணக்கான வருடங்களுக்கும் மேலான கலாச்சாரம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், தனித்துவமான நடனம், உணவு இப்படி எல்லா விஷயங்களிலும் முதன்மையில் இருப்பது தமிழ்நாடு. ஆம் இந்த உலகில் தோன்றிய முதல் மொழி மற்றும் தற்போது வரை நடைமுறையில் இருக்கும் முதல் மூத்த மொழி தமிழ். இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் தனது தாய் மொழியைக் கொண்டு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. கல்வி, தொழில், நிறுவனங்கள் என்று அனைத்திலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் புதுமையான மற்றும் தனித்துவமான கட்டிடக்கலையால் பல சுற்றுலாத் தளங்கள் இருக்கிறது.

How To Prepare For Trekking? | மலையேற்றம் செய்வது எப்படி?

UDHAYA KUMAR December 10, 2022

மலைப்பகுதியில் பயணம் செய்வதற்கென்றே பல வழிகாட்டிகள் இருப்பார்கள். அவர்களின் உதவியுடன் செல்பவர்களுக்கும் சரி, இந்த தகவல்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். மலைப்பகுதியில் பயணிப்பது தொடர்பான டிப்ஸ்கள் வாக்கிங், ஹைக்கிங், டிரெக்கிங் என பலவாறு அழைத்தாலும் தமிழில் இதை மலையேற்றம் என்றே அழைக்கிறார்கள். வாக்கிங் என்பது சமதளமான பகுதியில் 1 முதல் 4 கிமீ தூரம் அளவுக்கு நடப்பது. ஹைக்கிங் என்பது 4 மணி நேர தூரத்திலிருந்து 1 நாளுக்குள் ஏறி இறங்கிவிடும் வகையில் மலையேற்றம் செய்வது. டிரெக்கிங் என்பது மலையில் பயணம் செய்து, அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு பொழுதுபோக்கி மனதை நிம்மதியாக அமர்த்துவதுதான். மலையேற்றம் செய்வதற்கு முன் தொடர்ச்சியாக வாக்கிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும் அதிகாலை வேளையில் டிரெக்கிங் செல்ல திட்டமிடும்போது இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையிலேயே மலை ஏறுவதால் அதிகம் மூச்சு வாங்கலாம். இதனால் நடைபயிற்சி வழக்கமாக செல்பவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுவது இல்லை மூச்சு பயிற்சி, தியானம் உள்ளிட்டவை வழக்கமாக செய்ய வேண்டும் மலையேற்றத்துக்கு உடல் வலிமையும் மன வலிமையும் மிகவும் முக்கியம். மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும். பயப்படக் கூடாது. இந்தியாவின் மலைப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். இதனால் அந்தந்த மலைப்பகுதிக்கு ஏற்றவகையிலான ஷூக்களை வாங்க வேண்டும். காரமான, வயிற்றைக் கெடுக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. அதேநேரம் வீட்டிலிருந்து சாப்பிட்டு செல்வதாக இருந்தாலும் பயண காலத்தில் உங்களுக்கு ஒத்துக்காத உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரெட், ஜாம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு, நீர்ச்சத்து நிறைந்த சாப்பிடும் பொருட்களை கொண்டு செல்லலாம் தேவைப்படும் என நினைத்து கண்டது கழியது என அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. நாமே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். டார்கெட் வைத்து வேகமாக நடந்து செல்வதால் தேவையற்ற பிரச்னைதான் உண்டாகும். மெதுவாக நடந்து சென்று இலக்கை அடையலாம். மலையேற்றத்தின் போது சாய்வான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டாம். சமதளபரப்பில் நின்று, அமர்ந்து ஓய்வெடுங்கள் உடலுக்கு உகந்த ரொம்பவும் தளர்வாக இல்லாத அதிக எடை இல்லாத உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். முடிந்தவரை ஆட்களுடன் செல்வது சிறந்தது. தனியாக சென்று முழித்துக் கொண்டிருக்கக்கூடாது மிக மிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. சுற்றுலா செல்வதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய அளவில் ஈடுபாடு இருக்காது. அவர்கள் படிக்க, உழைக்க, சம்பாதிக்க செய்வதை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுவார்கள். அவர்களிடம் சுற்றுலா பற்றி கேட்டால் அதிகபட்சம் கோவில்களுக்கு செல்வதையே சுற்றுலா என்பார்கள். ஆனால் இந்த தலைமுறையினர் கொஞ்சம் சுற்றுலாவைப் பற்றிய புரிதலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மன நிம்மதியைத் தேடி காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சுற்றுலாவின் நன்மையை உணர்ந்து அவ்வப்போது பயணியுங்கள்.