Nandhinipriya Ganeshan March 21, 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வரும் நிலையில், வேளாண் பட்டதாரிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் 200 வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது விவசாயத் துறையை மேம்படுத்துவதோடு, வளர்ச்சியினையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார். 2021 - 22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதாகவும், வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.
Nandhinipriya Ganeshan December 26, 2022
தமிழக அளவில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர் பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் மற்றும் பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 70 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயிகள் தண்ணீர் தேக்க தொட்டி கட்டிக்கொள்ள ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதை எப்படி வாங்குவது, என்னென்ன ஆவணங்கள் தேவை, யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan December 14, 2022
விவசாயிகள் பயிரிடும் பயிர்களை பூச்சிகள் மற்றும் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காட்டெருமைகள், யானைகள், மயில்கள், குரங்குகள் போன்றவை பயிர்களை அதிகளவு சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதற்காக, பலரும் மின்சார வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், சில சமயங்களில் மனிதர்களும் எதிர்பாராத விதமாக வேலியை தொடும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், மின்சார வேலி அமைப்பது அவ்வளவாக பாதுகாப்பு கிடையாது.
Gowthami Subramani November 08, 2022
மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை வழிவகுத்து, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையில் பயன் தருகின்றன. அதன் படி, தமிழக அரசு தற்போது கூறியதாவது விவசாயிகள் 90% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை அமைத்துப் பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளது. அரசு வழங்கிய இந்த திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Gowthami Subramani September 26, 2022
பெரும்பாலானோர் தோட்டக்கலை வைத்து செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அந்த வகையில், நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு தோட்டக்கலை பயன்பாடுகள் மிக அதிக அளவில் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். அதன் படி, செங்குத்து தோட்டம் என்பது Vertical Farming என ஆங்கிலத்தில் அழைக்கப்படக் கூடிய நவீன தோட்டக்கலையின் அங்கமாகக் கருதப்படுகிறது. இந்த செங்குத்து தோட்டக்கலை அமைப்பதற்கு அரசு தரும் மானியத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
Gowthami Subramani September 23, 2022
மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயிகளுக்கும், விவசாயப் பெருமக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பான திட்டம் பிஎம் கிசான் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையினைப் பெற்று வருகின்றனர். அதன் படி, இந்த திட்டத்தில் மூன்று தவணைகளாக நான்கு மாதத்திற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும். இதில், விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும். விவசாயிகள் கடன் பெறுவதற்கு ஒரு எளிமையான திட்டமாகும்.
Gowthami Subramani September 22, 2022
கொரோனா, ரஷ்ய-உக்ரைன் போர் போன்றவற்றின் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இதற்கான பற்றாக்குறையும் மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் மிக அதிக வீதத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக, பிற்காலத்தில் பெட்ரோலே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் கூறப்பட்டு வருகிறது.
Gowthami Subramani September 02, 2022
மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாயத்தையும், விவசாயிகளின் நலனிற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ், விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்காகவும், ஆண்டு தோறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Gowthami Subramani August 16, 2022
விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. அந்த வகையில், விவசாயிகளுக்கு ரூ.1.2 லட்சம் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்புக்கான மானியம் வழங்குதல் அரசு மூலம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்டலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களையும், விவசாயிகள் மானியத் தொகை பெறும் முறைகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Gowthami Subramani August 11, 2022
மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதன் படி, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசு அமல்படுத்திய திட்டமான பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைகிறது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை விவசாயிகளுக்கு அரசு வெளியிட்டுள்ளது.