Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டுக் கடன் வாங்கிய பின்பு எந்த ஒரு மாற்றம் செய்தாலும் கட்டணமா? | Home Loan Fees and Charges

Priyanka Hochumin Updated:
வீட்டுக் கடன் வாங்கிய பின்பு எந்த ஒரு மாற்றம் செய்தாலும் கட்டணமா? | Home Loan Fees and Charges Representative Image.

எப்படி நாம் வீட்டுக் கடன் வாங்குவாதற்கு முன்னர் பல கட்டணங்கள் கட்ட வேண்டிய நிலை இருக்கிறதோ, அதே போல ஏதேனும் மாற்றம் மற்றும் கால தாமதம் ஏற்படும் காரணங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, என்னென்ன காரணங்களுக்கு அபராதம் தர வேண்டும் என்பதை இந்த பதிவில் பாப்போம்.

வீட்டுக் கடன் வாங்கிய பின்பு எந்த ஒரு மாற்றம் செய்தாலும் கட்டணமா? | Home Loan Fees and Charges Representative Image

EMI தாமதமானால் அபராதம் | EMI Late Payment Charges

வீட்டுக் கடன் வாங்கிய உடன் மாத தவணையை சரியான தேதியில் கட்ட வேண்டும். சில காரணங்களால் ஓரிரு நாள் தாமதம் ஆனால் 2 அல்லது 3 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும். எனவே, சம்பள எந்த தேதியில் வருமோ அதில் இருந்து ஐந்து நாட்கள் தள்ளி இ.எம்.ஐ  தேதியை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலும் நீங்கள் சம்பளம் வாங்கும் வங்கி கணக்கு மூலமே வீட்டுக் கடனை வாங்கினால் கூடுதல் சிறப்பு.

செக் பௌண்ஸ் | Bounce Charges  

இப்போது நாம் வீட்டுக் கடனுக்கான மாத தவணையை காசோலை மூலம் வங்கிக்கு தருகிறீர்கள். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பினால் சம்மந்தப்பட்ட வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும். இதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் வீட்டுக் கடன் வாங்கும் மற்றும் காசோலை தரும் வங்கியும் ஒன்றாக இருந்தால் ஒரே அபராதத்தில் முடிந்து விடும். இதுவே இரண்டும் வெவ்வேற வங்கியாக இருந்தால் நமக்குத் தான் டபுள் செலவு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டுக் கடன் வாங்கிய பின்பு எந்த ஒரு மாற்றம் செய்தாலும் கட்டணமா? | Home Loan Fees and Charges Representative Image

தவணை தேதி மாற்றம் | Installment Date Change Charge

நாம் வீட்டுக் கடன் வாங்கும் போது ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்போம். அங்கு சரியாக 1 ஆம் தேதி சம்பளம் வந்து விடும் என்றால் நாம் மாத தவணை தேதியை நான்கு அல்லது ஐந்து நாட்கள் தள்ளி நிர்ணயம் செய்திருப்போம். சிறிது காலத்திற்கு பிறகு புதிய வேலை கிடைத்துவிட்டது, ஆனால் அங்கு 10 ஆம் தேதிக்குள் தான் சம்பளம் கிடைக்கும் என்றால் நாம் மாத தவணை தேதியில் மாற்றம் செய்ய வேண்டும். எனவே, ஒவ்வொரு முறை இப்படி மாற்றம் செய்யும் போதும் சிறிய தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

மாத தவணைத் தொகை மாற்றம் | Installment Amount Change Charge

வீட்டுக் கடனுக்கான மாத தவணையை சரியாக செலுத்தி குறைத்திருக்கலாம். அல்லது உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கலாம். எனவே, மாத தவணைத் தொகையை அதிகரிக்க விரும்பினால் அதற்கான மாற்றத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

வீட்டுக் கடன் வாங்கிய பின்பு எந்த ஒரு மாற்றம் செய்தாலும் கட்டணமா? | Home Loan Fees and Charges Representative Image

வட்டி விகித மாற்றம் | Conversion Charge - Switching Fee 

நாம் வீட்டுக் கடன் வாங்கும் போது நிலையான மற்றும் மாறுபடும் வட்டி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருப்போம். இப்போது நீங்கள் அவற்றை மாற்ற நைனிதால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது மீதமுள்ள கடன் தொகையில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்படும்.

பகுதிக் கடன் அடைக்க | Part Payment Charge

வீட்டுக் கடன் வாங்கிய ஓராண்டில் அபராதம் எதுவும் இல்லாமல் நிர்ணயம் செய்யப்பட்ட மாத தவனாய் தொகையை விட அதிகமாக செலுத்தலாம். இருப்பினும், வாங்கிய கடனில் இருந்து ஒரு பாதியை அடிக்க கட்டணம் கட்ட வேண்டும். இது நிலையான வட்டி தேர்வு செய்தவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. அதற்கான தொகை மட்டும் நிறுவனம் மற்றும் வங்கிகளுக்கு ஏற்ற மாறுபடும். மாறுபடும் வட்டியில் இருப்பவர்களுக்கு கிடையாது.

வீட்டுக் கடன் வாங்கிய பின்பு எந்த ஒரு மாற்றம் செய்தாலும் கட்டணமா? | Home Loan Fees and Charges Representative Image

சீக்கிரம் கடன் அடைக்க | Pre-Closure Charge

நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்கு முன்பே வீட்டுக் கடனை அடைக்க முயற்சித்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது நாம் வீட்டுக் கடன் வாங்கி அதனை திருப்பி அடைக்கும் காலம் 10 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளோம். ஆனால் வருவாய் அதிகரித்ததால் சீக்கிரம் அந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் அடைக்க விரும்பினால் அதற்கு கட்டணம். அந்த தொகையானது பாக்கியுள்ள கடன் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் தர வேண்டும். இதிலும் மாறுபடும் வட்டிக்கு கிடையாது, நிலையான வட்டியில் இருப்பவர்களுக்கு இந்த கட்டணம் உண்டு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்